ADDED : நவ 07, 2025 10:58 PM

பொதுவாக ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் இருக்கும். அது உணவாக இருந்தாலும் சரி, மற்ற விஷயங்களாக இருந்தாலும் சரி. தமிழகத்தின் தஞ்சாவூர் என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கோவில்களும், தலையாட்டி பொம்மைகளும் தான். ஆனால் உரப்பு அடைக்கும் தஞ்சாவூர் ஸ்பெஷலாக உள்ளது. இந்த அடையை வீட்டில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை போட்டு, நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரிசி, பருப்புகள் நன்கு ஊறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு காய்ந்த மிளகாய், சோம்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் நறுக்கிய தேங்காய் துண்டுகள், சுரைக்காய், கொத்தமல்லி இலை, கறிவேப்பில்லை சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுப்பை ஆன் செய்து, கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து, பதமாக இருக்கும் மாவை ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து எடுத்தால், சுவையான உரப்பு அடை தயார். வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி வைத்து சாப்பிட சூப்பரான காம்பினேஷனாக இருக்கும்.
பிரேக் பாஸ்ட் அல்லது டின்னருக்கு கூட, அடை செய்யலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதுடன், அடிக்கடி செய்து தரும்படி கேட்பர்.
- நமது நிருபர் -

