தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ வீட்டிலேயே செய்யலாம் பலாப்பழ அல்வா

வீட்டிலேயே செய்யலாம் பலாப்பழ அல்வா

வீட்டிலேயே செய்யலாம் பலாப்பழ அல்வா


ADDED : நவ 07, 2025 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2025 10:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அல்வா என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது திருநெல்வேலி தான். அதன் பின், அல்வாவில் பல வகைகள் வந்துள்ளன. அந்த வரிசையில், இந்த வாரம் பலாப்பழ அல்வா. கேரள மாநிலத்தில் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் இனிப்பு வகை.

செய்முறை  பலா சுளையில் உள்ள கொட்டைகளை நீக்கிக் கொள்ளவும். அவற்றை சிறிய சிறிய துண்டுகளாக்கி வேகவைக்கவும். கொஞ்சம் சூடு ஆறியதும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

 வெல்லத்தில் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக் கொள்ளவும். பின்னர் வேக வைத்த பலாப்பழ சுளைகளுடன் வெல்லப் பாகு சேர்க்கவும்.

 ஒரு கடாயில் நெய் ஊற்றி சிறிது சூடானதும் பலாப்பழ வெல்லக் கலவையை ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, பச்சரிசி மாவு மற்றும் தேங்காய் பால் சேர்த்து கெட்டியாகாமல் நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.

 நன்கு கெட்டியாகும் பதத்திற்கு வரும்போது முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து துாவவும். இறுதியாக சிறிதளவு ஏலக்காய் துாள் சேர்த்து கிளறிவிட்டால் போதும், ஆரோக்கியம் நிறைந்த பலாப்பழ அல்வா சாப்பிடலாம்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us