/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நிர்ணயித்த இடத்தில் தரையிறங்காமல் திசை மாறிய முதல்வரின் ஹெலிகாப்டர்
/
நிர்ணயித்த இடத்தில் தரையிறங்காமல் திசை மாறிய முதல்வரின் ஹெலிகாப்டர்
நிர்ணயித்த இடத்தில் தரையிறங்காமல் திசை மாறிய முதல்வரின் ஹெலிகாப்டர்
நிர்ணயித்த இடத்தில் தரையிறங்காமல் திசை மாறிய முதல்வரின் ஹெலிகாப்டர்
ADDED : பிப் 09, 2026 05:08 AM

ராய்ச்சூர்: லிங்கசகூரில் முதல்வர் சித்தராமையாவை அழைத்து வந்த ஹெலிகாப்டர், நிர்ணயித்த ஹெலிபேடில் இறங்காமல், வேறு இடத்துக்கு சென்றதால், அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.
ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசகூர் நகரில் முன்னாள் அமைச்சர் அமரேகவுடா பாட்டீல் பையாபுரா பேரனின் திருமணம், நேற்று நடந்தது. இதில் முதல்வர் சித்தராமையாவும் பங்கேற்கவிருந்தார். முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பயணிக்கும் ஹெலிகாப்டர்கள் தரை இறங்குவதற்காக, ராய்ச்சூர் சாலையில் சீனிவாஸ் லே - அவுட்டில் ஹெலிபேட் அமைக்கப்பட்டிருந்தது.
பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில் வரும் முதல்வர் சித்தராமையாவை வரவேற்று, திருமண நிகழ்ச்சிக்கு அழைத்து செல்ல, இந்த ஹெலிபேடில் மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால், முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர், திசை மாறி பா.ஜ., - எம்.எல்.ஏ., மானப்பா வஜ்ஜலின் தனிப்பட்ட ஹெலிபேடில் தரையிறங்கியது.
முதல்வரின் ஹெலிகாப்டர் வராததால், அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். அதன்பின் வேறு இடத்தில் தரையிறங்கியதை அறிந்து, அங்கு விரைந்து சென்று முதல்வரை அழைத்து வந்தனர்.
துணை முதல்வர் சிவகுமாரும், இதே திருமணத்துக்கு வந்திருந்தார். இவர் பயணித்த ஹெலிகாப்டர், நிர்ணயித்த ஹெலிபேடில் தரை இறங்கியது. ஆனால், முதல்வரின் ஹெலிகாப்டர் திசை மாறி, வேறு இடத்துக்கு சென்றது சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது.
துணை முதல்வர் சிவகுமார் இருந்த ஹெலிபேடில், தரை இறங்க வேண்டாம் என, முதல்வர் சித்தராமையாவே, பைலட்டுக்கு உத்தரவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2 விமானிகள் படுகாயம் விஜயபுரா மாவட்டம், பபலேஸ்வர் தாலுகா மங்களூரு என்ற கிராமத்தில் நேற்று மதியம் 3:00 மணியளவில், 'டமார்' என்ற சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் சத்தம் வந்த இடத்திற்கு சென்று பார்த்த போது, வயலில் சிறிய ரக விமானம் தலைகீழாக விழுந்து கிடந்தது.
விமானத்தில் இருந்த இருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர் . இருவரும் மீட்கப்பட்டு, விஜயபுரா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்ததும் விஜயபுரா எஸ்.பி., லட்சுமண் நிம்பரகி, பபலேஸ்வர் போலீசார் விரைந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், வயலில் விழுந்த சிறிய ரக விமானம், 'ரெட் பேர்டு ஏவியேஷன்' என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், கலபுரகியில் இருந்து பெலகாவி நோக்கி சென்றதும் தெரிந்தது.
விமானத்திற்குள் இருந்த மூத்த விமானி குணால் மல்ஹோத்ரா, பயிற்சி விமானி கவுதம் சங்கர் படுகாயம் அடைந்தது தெரிந்தது. தொழில்நுட்ப கோளாறால் வயலில் தரையிறக்க முயன்ற போது, விமானம் விபத்தில் சிக்கியதா, வேறு காரணமா என்று விசாரணை நடக்கிறது.

