/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இறந்ததாக கருதப்பட்டவர் உயிர் பிழைத்த அதிசயம்
/
இறந்ததாக கருதப்பட்டவர் உயிர் பிழைத்த அதிசயம்
ADDED : நவ 07, 2025 11:04 PM
கதக்: அறுவை சிகிச்சைக்கு பின் உயிரிழந்ததாக கருதப்பட்ட நபர், இறுதிச் சடங்கின்போது கண் திறந்த அதிசய சம்பவம், கதக்கில் நடந்தது.
கதக், பெ டகேரியில் வசிப்பவர் நாராயணா, 38. பித்தப்பை பிரச்னையால் அவதிப்பட்ட இவர், தார்வாடின் தனியார் ம ருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன் தினம் அவருக்கு ஆறு மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதன்பின் குடும்பத்தினர், அவரது உடலை ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். நேற்று இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடுகள் நடந்தன. பெடகேரியில் அவருக்கு இரங்கல் போஸ்டரும் ஒட்டப்பட்டிருந்தது. வீட்டில் உறவினர்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில் நாராயணா மூச்சு விட துவங்கியதுடன், கண்களையும் திறந்தார். ஆச்சர்யமடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை தொடர்கிறது.

