தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ராமரும் - ஹனுமனும் சந்தித்த இடம்

 ராமரும் - ஹனுமனும் சந்தித்த இடம்

 ராமரும் - ஹனுமனும் சந்தித்த இடம்


ADDED : பிப் 03, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 06:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

விஜயநகரா மாவட்டம், ஹம்பியில் உள்ள விருபாக் ஷா கோவில் மிகவும் பிரபலமான தலம். இந்த கோவிலில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் யந்த்ரோதாரகா ஹனுமன் கோவில் உள்ளது. சில புராண கதைகள் கடவுள் ராமரும் - ஹனுமனும் முதன்முதலில் இங்கு தான் சந்தித்தனர் என்று கூறுகிறது.

வேறு சில வரலாறுகள், மன்னர் ஸ்ரீவியாசராஜா, கோவில் அமைந்துள்ள இடத்தில் உள்ள பாறைகள் மீது, ஹனுமன் உருவத்தை தினமும் வரைந்து, பிரார்த்தனை செய்ததாகவும், அவரது பிரார்த்தனை முடிய போகும் நேரத்தில் ஹனுமன் உருவம் மறைந்து போகும் என்றும், ஹனுமனிடம் தன் முன்பு தோன்றுமாறு அவர் கெஞ்சியதால், ஹனுமன் கடவுளாக தோன்றியதாகவும் கூறப்படுகிறது.

துங்கபத்ரா ஆற்றின் கரையோரம் அமைந்து உள்ள இந்த கோவிலில், கருவறையில் அறுகோண தாயத்திற்குள் அமைக்கப்பட்ட நிலையில் ஹனுமன் சிலை உள்ளது. ஹம்பியில் உள்ள மற்ற ஹனுமன் கோவில்களில், அவர் ஒரு கை உயர்த்தி, இன்னொரு கையை இடுப்பில் வைத்திருப்பது போன்று சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த கோவிலிலில் மட்டும் ஹனுமன் பிரார்த்தனை நிலையில் இருப்பது போன்று, பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

ஹனுமன் தாயத்தை சுற்றி 12 குரங்குகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. அவை, மன்னர் வியாசராஜா, ஹனுமனை வழிபட்ட 12 நாட்களை குறிக்கின்றன.

அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு 100 படிக்கட்டுகளில் ஏறி செல்ல வேண்டும். தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும்; மதியம் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

l எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து ஹம்பி 350 கி.மீ., துாரத்தில் உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து ஹம்பிக்கு நேரடி பஸ் வசதி உள்ளது. ரயிலில் செல்வோர் ஹொஸ்பேட் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 13 கி.மீ., துாரத்தில் உள்ள ஹம்பிக்கு, வாடகை கார், ஆட்டோக்களில் செல்லலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us