/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'வார்த்தையின் சக்தி, உலகத்தின் சக்தி' சிவா பதிவுக்கு சித்து புது விளக்கம்
/
'வார்த்தையின் சக்தி, உலகத்தின் சக்தி' சிவா பதிவுக்கு சித்து புது விளக்கம்
'வார்த்தையின் சக்தி, உலகத்தின் சக்தி' சிவா பதிவுக்கு சித்து புது விளக்கம்
'வார்த்தையின் சக்தி, உலகத்தின் சக்தி' சிவா பதிவுக்கு சித்து புது விளக்கம்
ADDED : நவ 28, 2025 05:48 AM

பெங்களூரு: 'வார்த்தையின் சக்தி, உலகத்தின் சக்தி' என்று பதிவிட்ட துணை முதல்வர் சிவகுமாருக்கு, முதல்வர் சித்தராமையா பதிலடி கொடுத்து உள்ளார். 'கர்நாடகாவுக்கான எங்கள் வார்த்தை வெறும் முழக்கம் மட்டுமில்லை; அது உங்களுக்கான உலகத்தை குறிக்கிறது' என்று கூறி உள்ளார்.
முதல்வர் பதவி விவகாரம் தொடர்பாக, துணை முதல்வர் சிவகுமார் 'எக்ஸ்' பக்கத்தில், வார்த்தையின் சக்தி, உலகத்தின் சக்தி என்று பதிவிடப்பட்டு இருந்தது. இதற்கு பதிலடி கொடுத்து முதல்வர் சித்தராமையாவின் 'எக்ஸ்' வலைதள பதிவு:
நாம் கொடுக்கும் வார்த்தை, மக்களுக்கு நன்மையாக இருக்கா விட்டால், அது சக்தி இல்லை. அரசின் சக்தி திட்டம் பெண்களுக்கு 600 கோடிக்கும் மேற்பட்ட இலவச பயணங்களை வழங்கி உள்ளது. கிரஹலட்சுமி திட்டம் 1.24 கோடி பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
யுவ நிதி திட்டம் 3 லட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு உதவுகிறது. அன்னபாக்யா திட்டம் 4.08 கோடி குடும்பங்களின் உணவு பாதுகாப்பாக உள்ளது. கிரஹ ஜோதி திட்டம் 1.64 கோடி மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறது.
எனது முதல் பதவி காலமான 2013 முதல் 2018 வரை கொடுக்கப்பட்ட 165 வாக்குறுதியில் 157 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன.
இது 95 சதவீதம். தற்போதைய பதவிக்காலத்தில் 593 வாக்குறுதிகளில் 243 நிறைவேற்றப்பட்டு உள்ளன.
மீதமுள்ள வாக்குறுதிகளும் அர்ப்பணிப்பு, அக்கறையுடன் நிறைவேற்றப்படும். கர்நாடகாவுக்கான எங்கள் வார்த்தை முழக்கம் மட்டும் இல்லை. அது உங்களுக்கான உலகத்தை குறிக்கிறது.
இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.

