/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பள்ளி மணி ஓசையே சிறந்தது மது பங்காரப்பா தத்துவம்
/
பள்ளி மணி ஓசையே சிறந்தது மது பங்காரப்பா தத்துவம்
ADDED : ஜூலை 08, 2025 11:55 PM

கொப்பால் : கொப்பால் மாவட்டம், எல்புர்காவின் ஹிரேவன்கல்குன்டா கிராமத்தில் பெண்கள் உயர் நிலைப்பள்ளியை திறந்து வைத்து அமைச்சர் மது பங்காரப்பா பேசியதாவது:
ஹிந்துத்துவாவை பற்றி மட்டுமே பா.ஜ.,வினர் பேசுகின்றனர். இது பற்றி அவர்களுக்கு தெரியுமா. கோவில்கள் மேம்பாட்டுக்கு, அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது நிதி ஒதுக்கவில்லை. ஆனால், நாங்கள் நிதி ஒதுக்கி உள்ளோம். இதில் ஜாதி, மதம் பார்ப்பதில்லை. தொழிலதிபர் அஜிம் பிரேம்ஜி எந்த ஜாதியை சேர்ந்தவர். இத்தகைய புனிதமான மனம் கிடைக்க, மாநில புண்ணியம் செய்துள்ளது.
என் தொகுதியில் கோவிலுக்கு நன்கொடை கேட்டு என்னிடம் வருவர். ஆனால், பணம் தரமாட்டேன். கோவிலில் மணி ஒலித்தால் என்ன நடக்கும் என்று தெரியாது. பள்ளியில் மணி ஒலிப்பது சிறந்தது. என் தலைமுடி குறித்து பா.ஜ.,வினர் விமர்சிக்கின்றனர். நான் தலைமுடியை வெட்டியபோது, என் தந்தை 15 நாட்கள் பேசாமல் இருந்தார்.
தேர்வில் காப்பி அடித்து தேர்ச்சி பெறும் நடைமுறையை தடுத்ததற்காக, முன்னாள் கல்வி துறை அமைச்சர் என்னை விமர்சித்தார். காப்பி அடித்தால் தேர்வில் வெற்றி பெறலாம்; ஆனால், வாழ்க்கையில் தோல்வி அடைவீர்கள்.
மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் பரவாயில்லை. அவர்களை சரி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு ஆண்டில் மூன்று முறை பொதுத்தேர்வு நடத்தப்படுவதால், மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.