தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஏழு உயிர்களை காவு வாங்கியும் சீரமைக்கப்படாத 'பவுரிங்' சுற்றுச்சுவர் 

 ஏழு உயிர்களை காவு வாங்கியும் சீரமைக்கப்படாத 'பவுரிங்' சுற்றுச்சுவர் 

 ஏழு உயிர்களை காவு வாங்கியும் சீரமைக்கப்படாத 'பவுரிங்' சுற்றுச்சுவர் 


ADDED : மே 09, 2026 11:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 11:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: குழந்தை உட்பட ஏழு பேரை பலிவாங்கிய பவுரிங் மற்றும் லேடி கர்சன்மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இன்னும் சீரமைக்கப்படாமல் அப்படியே உள்ளது.

பெங்களூரில் கடந்த மாதம் 29ல் பலத்த கோடை மழை பெய்தது. அப்போது, பவுரிங்மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அங்குமழைக்காக ஒதுங்கிய, குழந்தை உட்பட ஏழு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து, பொதுப்பணித்துறையின் ஓய்வு பெற்ற தலைமைப்பொறியாளர் தலைமையில் விசாரணைக்குழுவை, அரசு அமைத்தது. கடந்தவியாழக்கிழமை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி இந்தக் குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து லோக் ஆயுக்தாவும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

லோக் ஆயுக்தா விசாரணைக்குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்த நிலையில், அரசு அமைத்தக் குழு இன்னும் அங்கு ஆய்வுசெய்யவில்லை.

வரும் திங்கட்கிழமை அறிக்கையை அரசிடம்இந்தக் குழு தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது.

மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கூடம், சவக்கிடங்கு அமைந்துள்ள பகுதியின் சுற்றுச்சுவர் 25 மீட்டர் அளவுக்கு இடிந்து கிடக்கிறது. இடிபாடுகள் இன்னும் அப்புறப்படுத்தப்படவில்லை.

எனினும் அந்த வழியே போக்குவரத்துக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.இடிந்து விழுந்த பகுதியில் தற்காலிகத் தடுப்பு அமைப்பாக மணல் மூட்டைகள்வைக்கப்பட்டுள்ளன. சுவரின் எஞ்சிய பகுதி அருகே அபாயத்தை உணராமல்பாதசாரிகள் சென்று வருகின்றனர்.

சேதமடைந்த சுற்றுச்சுவரைச் சீரமைக்கும் பொறுப்பு மருத்துவமனை நிர்வாகத்தின் வேலை என கூறிய, பெங்களூரு மத்திய மாநகராட்சி அதிகாரிகள், சுற்றுச் சுவர் சீரமைக்கப்படாததற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என கூறி, நழுவினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us