'கேட்பாரற்ற வாகனங்கள் அகற்றும் பணி விரைவில் முடியும்'
'கேட்பாரற்ற வாகனங்கள் அகற்றும் பணி விரைவில் முடியும்'
ADDED : ஜூலை 18, 2026 11:06 PM
பெங்களூரு: 'சாலைகளில் நீண்ட நாட்களாக நின்று கொண்டிருக்கும் வாகனங்களை அகற்றும் பணி இம்மாத இறுதிக்குள் முடிவடையும்' என, ஜி.பி.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் பல இடங்களில் உள்ள சாலைகளில் நீண்ட நாட்களாக நின்று கொண்டிருக்கும் வாகனங்களை அகற்ற முடிவு எடுக்கப்பட்டது. பல பகுதிகளில் உள்ள சாலைகளில் நின்று கொண்டிருந்த, 3,250 வாகன உரிமையாளர்களுக்கு, கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
உரிய பதிலளிக்காதவர்களின், 1,581 வாகனங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணி, கடந்த 10ம் தேதி துவங்கியது.
இதுவரை, 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள வாகனங்கள், இம்மாத இறுதிக்குள் அகற்றப்படும் என, ஜி.பி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்து போலீசாரின் துணையோடு வாகனங்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. அகற்றப்படும் வாகனங்களை மீட்பதற்கு, அவற்றின் உரிமையாளர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.
இல்லையெனில் வாகனங்களை ஏலம் விட முடிவு செய்துள்ளதாக, ஜி.பி.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
