/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பசவராஜ் ராயரெட்டி பண்ணை வீட்டில் திருட்டு: 15 பேர் கைது
/
பசவராஜ் ராயரெட்டி பண்ணை வீட்டில் திருட்டு: 15 பேர் கைது
பசவராஜ் ராயரெட்டி பண்ணை வீட்டில் திருட்டு: 15 பேர் கைது
பசவராஜ் ராயரெட்டி பண்ணை வீட்டில் திருட்டு: 15 பேர் கைது
ADDED : ஆக 20, 2025 11:28 PM

தார்வாட் : முதல்வரின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டியின் பண்ணை வீட்டில் திருடியது தொடர்பாக, 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
தா ர்வாட் நகரின் தட்டிகமலாபுரா கிராமத்தின் அருகில் முதல்வரின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டிக்கு சொந்தமான, 'மமதா' என்ற பெயரில் பண்ணை வீடு உள்ளது .
இந்த பண்ணைக்கு முதல்வர் சித்தராமையா உட்பட பல்வேறு அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் பல முறை வந்துள்ளனர்.
கடந்த 13ம் தேதி நள்ளிரவு , மர்ம கும்பல், இந்த பண்ணைக்குள் நுழைந்தது. அங்கு உறக்கத்தில் இருந்த ஊழியர்கள் ஹனுமந்தா தனதாவர், அசோக் போத்தலி, லட்சுமண் சந்தரகி ஆகியோரை தாக்கி கயிற்றால் கட்டிப்போட்டனர்.
அவர்களின் மொபைல் போன்கள் உட்பட அங்கிருந்த பல பொருட்களை கொள்ளையடித்து தப்பியோடினர்.
இது குறித்து, தார்வாட் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. கொள்ளையர்களை கண்டுபிடிக்க எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுவினர் பல்லாரி, ராய்ச்சூர், விஜயநகரா உட்பட பல்வேறு நகரங்களில் கொள்ளையர்கள் குறித்து தகவல் சேகரித்தனர்.
பல கோணங்களில் விசாரணை நடத்தி, 15 பேரை நேற்று காலையில் கைது செய்தனர். இவர்களிடம் விசாரித்ததில், பண்ணை வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இவர்களிடம் இருந்து 16 மொபைல் போன்கள், எட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.