தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/என்னை வீழ்த்த பள்ளம் தோண்டுகின்றனர்: ம.ஜ.த.,வின் நிகில் குமாரசாமி குற்றச்சாட்டு

என்னை வீழ்த்த பள்ளம் தோண்டுகின்றனர்: ம.ஜ.த.,வின் நிகில் குமாரசாமி குற்றச்சாட்டு

என்னை வீழ்த்த பள்ளம் தோண்டுகின்றனர்: ம.ஜ.த.,வின் நிகில் குமாரசாமி குற்றச்சாட்டு


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 09:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 09:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோலார்: ‘‘எனக்காக பள்ளம் தோண்ட, என் எதிரிகள் காத்திருக்கின்றனர். அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோரை, ஒடுக்க முயற்சிக்கின்றனர்,’’ என, ம.ஜ.த., இளைஞர் பிரிவு தலைவர் நிகில் குமாரசாமி குற்றஞ்சாட்டினார்.

கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை ஏ.பி.எம்.சி., வளாகத்தில் விவசாயிகளுடன், நிகில் குமாரசாமி நேற்று கலந்துரையாடிய போது கூறியதாவது:

எங்கள் மீது எந்த தவறும் இல்லாததால், எங்களால் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த முடிகிறது. நாங்களும் தவறு செய்திருந்தால், எப்போதோ எங்கள் வாயை மூட வைத்திருப்பர். எனக்காக பள்ளம் தோண்ட, என் எதிரிகள் காத்திருக்கின்றனர். அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோரை, ஒடுக்க முயற்சிக்கின்றனர்.

விதான்சவுதாவுக்கு சென்று, உங்கள் சார்பில் குரல் எழுப்ப எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், ஜனநாயகத்தில் வீதியில் இறங்கி, போராட்டம் நடத்தும் சக்தி எனக்குள்ளது. நான் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால், அதற்காக நான் மனம் தளரவில்லை.

கிரஹஜோதி, கிரஹலட்சுமி திட்டங்களை கொடுத்ததாக, கூறிக்கொள்கின்றனர். விவசாயிகள் வாழ்க்கையில் இருள் அடைந்துள்ளது. விவசாயிகளுக்கு தினமும் எட்டு மணி நேரம், மின்சாரம் தாருங்கள். போர்வெல் தோண்ட 2 லட்சம் ரூபாய் செலவாகிறது. 1,600 அடி ஆழம் தோண்டினாலும், தண்ணீர் கிடைப்பது இல்லை. மின் வெட்டால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர்.

கே.சி.வேலி தண்ணீர், மூன்றாம் கட்டத்தில் சுத்திகரிப்பு செய்யப்படுவது இல்லை. இதனால், நிலத்தடி நீர் அசுத்தமாகிறது. பயிரிட்ட விளைச்சலை சாப்பிடவும் முடிவது இல்லை. இவற்றை யாரும் வாங்குவதும் இல்லை.

கோலார் மாவட்டத்துக்கு, கிருஷ்ணா ஆற்றின் நீரை கொண்டு வர முடியும். இது குறித்து, மத்திய அமைச்சர் குமாரசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். விரைவில் சாதகமாக நடக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us