/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பணியாற்றிய வீட்டில் திருடியவர் கைது ரூ.89 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு
/
பணியாற்றிய வீட்டில் திருடியவர் கைது ரூ.89 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு
பணியாற்றிய வீட்டில் திருடியவர் கைது ரூ.89 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு
பணியாற்றிய வீட்டில் திருடியவர் கைது ரூ.89 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு
ADDED : ஆக 13, 2025 04:33 AM

ஜெயநகர்: பணியாற்றிய வீட்டில் திருடிய நபரை, ஜெயநகர் போலீசார் கைது செய்தனர். 89 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன.
பெங்களூரு ஜெயநகரின் எட்டாவது பிளாக்கில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவர், தன் வீட்டிலேயே அலுவலகம் அமைத்துள்ளார். இந்த அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றியவர் கார்த்திக், 40. நல்ல முறையில் பணியாற்றி, தொழிலதிபர் குடும்பத்தின் நம்பிக்கையை பெற்றிருந்தார்.
வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம் பற்றி தெரிந்து கொண்டார். அதன்பின் அவ்வப்போது சிறிது, சிறிதாக தங்க நகைகளை திருடினார். இது தொழிலதிபரின் குடும்பத்தினருக்கு தெரியவில்லை. சமீபத்தில் பீரோவில் இருந்த நகைகளை சரி பார்த்தபோது, பெருமளவில் நகைகள் மாயமாகி இருந்ததை கண்டுபிடித்தனர்.
தொழிலதிபர் குடும்பத்தினருக்கு, மேலாளர் கார்த்திக் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து, ஜெயநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். கார்த்திக் பணியாற்றிய அலுவலக அறையில் சோதனையிட்டபோது, 7,000 ரூபாய், கள்ளச்சாவியை கண்டுபிடித்தனர். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, பணம், நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இவருக்கு சில தீய பழக்கங்கள் இருந்தன. இதற்கு பணம் தேவைப்பட்டதால், நண்பர்களிடம் அதிகமாக கடன் வாங்கினார். இதை அடைக்க வழி தெரியாமல், தொழிலதிபரின் வீட்டில் திருட திட்டம் தீட்டினார். இதற்காகவே பீரோவுக்கு கள்ளச்சாவி தயாரித்து வைத்திருந்தார்.
தொழிலதிபர் குடும்பத்தினர் வீட்டில் இல்லாதபோது, பீரோவை திறந்து, நகைகளை திருடியது, விசாரணையில் தெரிந்தது.
திருடிய தங்க நகைகளை, தியாகராஜநகரில் உள்ள நகைக்கடை மற்றும் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தில் விற்பனை செய்திருந்தார். அந்த பணத்தில் வெள்ளி பொருட்கள் வாங்கியதும் தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின்படி, 89 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டனர்.