/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சர் பதவிக்கு பரிதவிப்பு திங்களேஸ்வரா சுவாமி கேள்வி
/
அமைச்சர் பதவிக்கு பரிதவிப்பு திங்களேஸ்வரா சுவாமி கேள்வி
அமைச்சர் பதவிக்கு பரிதவிப்பு திங்களேஸ்வரா சுவாமி கேள்வி
அமைச்சர் பதவிக்கு பரிதவிப்பு திங்களேஸ்வரா சுவாமி கேள்வி
ADDED : ஜூலை 14, 2025 05:35 AM

பெங்களூரு,: ''இறக்கும் போது கவுரவம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், வயதான அரசியல்வாதிகள், அமைச்சர் பதவிக்காக பரிதவிக்கின்றனர்,'' என திங்களேஸ்வரா சுவாமிகள் தெரிவித்தார்.
அகில இந்திய வசன சாஹித்யா மற்றும் கலாச்சார பரிஷத் சார்பில், பெங்களூரில் நேற்று நடந்த பரிஷத் நுாற்றாண்டு விழாவில், கதக், சிரஹட்டியின் பகீரேஸ்வர மடத்தின் திங்களேஸ்வரா சுவாமிகள் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது:
தற்போதுள்ள அமைச்சர்கள் பலரும், மற்றவரை அரசியலில் இருந்து சன்னியாசிகளாக்க முயற்சிக்கிறார்களே தவிர, அவர்கள் சாகும் வரை சன்னியாசி ஆவதில்லை.
இறக்கும் போதும் கவுரவத்துடன் இருக்க விரும்புகின்றனர், அரசியல்வாதிகள் முதிய வயதிலும் அமைச்சர் பதவிக்காக முட்டி மோதுகின்றனர்.
பால்ய வயதில் தாயுடன் இருந்தால், இளமையில் மஹாத்மாக்களுடன் இருக்க வேண்டும். முதிய வயதில் பரமாத்மாவிடம் செல்ல வேண்டும். 50 வயது வரை இஷ்டப்படி சுகமாக வாழ்க்கையை கழித்து விட்டு, அதன்பின் பணியாற்ற துவங்குவோரை, குடும்பத்தினர் மட்டுமின்றி, சமுதாயமும் புறக்கணிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.