தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ முட்டை கேக் செய்வது இப்படி தான்!

 முட்டை கேக் செய்வது இப்படி தான்!

 முட்டை கேக் செய்வது இப்படி தான்!


ADDED : செப் 19, 2026 02:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 02:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: முட்டை, பால், சர்க்கரை, நெய் ஆகியவற்றை பயன்படுத்தி வீட்டிலேயே சுவையான முட்டை கேக் தயாரித்து அசத்தலாம்.

தேவையான பொருட்கள் முட்டை 3

பால் 1 லிட்டர்

சர்க்கரை 1 கப்

நெய் 2 டீஸ்பூன்

ஏலக்காய் துாள் சிறிதளவு

செய்முறை முதலில், ஒரு பாத்திரத்தில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி, அதை நன்கு அடித்து வைத்து கொள்ளவும். பின், வேறு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.

பால் கோவா பதத்திற்கு வரும் வரை காய்ச்சவும். இதன் முடிவில் பால் கோவா கிடைத்து விடும். இதனுடன் முட்டை கலவை, நெய் சேர்த்து மிதமான தீயில் கட்டி பிடிக்காதவாறு லேசாக கிளறவும். கலவை கெட்டியான மாவு பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

பின், சதுர வடிவிலான பெரிய பாத்திரத்தின் உட்பகுதியில் நெய் தடவி, அதில், கலவையை ஊற்றவும். இந்த பாத்திரத்தை மைக்ரோ வேவ் அடுப்பில், ௧௮௦ டிகிரி வெப்பம் 'செட்' செய்து 30 நிமிடங்கள் வைத்த பின், வெளியே எடுக்கவும். சுவையான கேக் தயார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us