/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலி ஆவணங்கள் தயாரித்த மூவர் கைது
/
போலி ஆவணங்கள் தயாரித்த மூவர் கைது
ADDED : மே 30, 2025 11:33 PM
பெங்களூரு: போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்து வந்த மூவரை சி.சி.பி., போலீசார் கைது செய்தனர். பெங்களூரில் நேற்று சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கமிஷனர் சந்திரகுப்தா அளித்த பேட்டி:
கர்நாடகாவில் வசிப்போர் லைசென்ஸ், அரசு திட்ட பயனாளிகளாவதற்கு, சேவா சிந்து இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில், பிற மாநிலங்களை சேர்ந்த சிலர், பெங்களூரில் வசிப்பதாக கூறி சான்றிதழ்களை சமர்ப்பித்தது தெரிய வந்தது.
இதுகுறித்து, சி.சி.பி., போலீசாரின் சிறப்பு விசாரணை குழு நியமிக்கப்பட்டது.
விசாரணையில், பெங்களூரில் செக்யூரிட்டி ஏஜன்சி என்ற பெயரில் போலி ஆவணங்களை விற்பனை செய்து வந்த தீபக், 35, உதய் குமார், 36, ராமகிருஷ்ணா,39, ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என போலியாக இருப்பிட சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்து வந்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய கணினி, போலி சான்றிதழ்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.