தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஒரே குடும்பத்தில் மூவர் கொலை திட்டமிட்டு கொன்றது அம்பலம்

 ஒரே குடும்பத்தில் மூவர் கொலை திட்டமிட்டு கொன்றது அம்பலம்

 ஒரே குடும்பத்தில் மூவர் கொலை திட்டமிட்டு கொன்றது அம்பலம்


ADDED : ஜூலை 09, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 09:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கே.ஆர்.புரம்: கே.ஆர்.புரத்தில் ஒரே குடும் பத்தில் மூன்று பேரை கொலை செய்த காதல் ஜோடி, உடலை எடுத்து செல்ல பெரிய அளவிலான பை வாங்கி வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ள து.

பெங்களூரு கே.ஆர்.புரம் சீகேஹள்ளி பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில், ஐ.டி., ஊழியர் சோமசுந்தர், 55, அவரது மனைவி மு த்துலட்சுமி, 48, மகள் சுப்ரியா, கடந்த மாதம் 22ம் தேதி கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சோமசுந்தரின் மூத்த மகள் ஸ்வேதா, 25, அவரது காதலன் கென்னத், 26, கைதாகினர். அவர்களை தங்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விசாரணையில் சொத்தில் பங்கு பிரிப்பது உட்பட பல பிரச்னைகளில் கொலை நடந்தது தெரிந்தது. விசாரணையின் போது ஒவ்வொரு நாளும் ஸ்வேதாவும், கென்னத்தும் மாற்றி, மாற்றி பேசுவது, போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த உள்ளனர்.

இந்நிலையில் போலீஸ் விசாரணையில், சில அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன.

தங்கள் காதலுக்கு இடைஞ்சலாக இருக்கும், தாய் முத்துலட்சுமியை கொல்ல, ஸ்வேதா முடிவு செய்தார். இதுபற்றி காதலன் கென்னத்திடம் கூறினார். முத்துலட்சுமியை கொலை செய்ய இருவரும், ஆறு மாதமாக திட்டம் போட்டனர்.

முத்துலட்சுமியை கொன்ற பின், அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டி எடுத்து சென்று, கென்னத் வசித்த இன்னொரு வீட்டிற்கு கொண்டு செல்ல முடிவு செய்திருந்தனர்.

உடலை எடுத்து செல்வதற்காக, பெரிய அளவிலான பையும் ஆர்டர் செய்து வாங்கியிருந்தனர். உடலை கரைப்பதற்காக வினிகர், எலுமிச்சை சாறு, பச்சை மிளகாய் விழுது உள்ளிட்ட பொருட்களையும் வாங்கி, தயார் நிலையில் வை த்திருந்தனர்.

கென்னத் வீட்டிற்கு உடலை கொண்டு வந்ததும் அதை எரித்து அழிக்க, அண்டாவும் வாங்கி வைத்திருந்தனர். புகை வெளியே சென்றால் மாட்டி கொள்வோம் என்பதால், விரைவில் புகையை வெளியேற்றும் சக்தி வாய்ந்த 'எக்சாஸ்ட் பேன்' வாங்கியதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us