ADDED : ஏப் 11, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: தங்கவயலில் கோடை வெயில் 32 டிகிரி செல்சியசை தாண்டியது. இதனால் வெப்பம் கொளுத்தியது. பள்ளி விடுமுறை என்பதால், வட்டரஹள்ளியை சேர்ந்த ரமேஷ், 35, தன் மகன் அகஸ்தியா, 8, மற்றும் சரண், 15 என்ற சிறுவனுடன் வட்டரஹள்ளி ஏரிக்கு சென்றுள்ளனர்.
மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க ரமேஷ் ஏரிக்குள் இறங்கினார். ஏரியின் சேற்றில் தந்தையும், மகனும் சிக்கினர்.
இவர்களை தொடர்ந்து சரண் என்பவரும் சேற்றில் சிக்கி உள்ளார். இதில், மூவருமே சேற்றில் புதைந்து உயிரிழந்தனர். கிராமத்தினர், ஏரியில் மூழ்கி பலியான மூவர் உடல்களை மேலே எடுத்தனர்.

