/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மயக்க ஊசி செலுத்தி புலி பிடிப்பு
/
மயக்க ஊசி செலுத்தி புலி பிடிப்பு
ADDED : அக் 18, 2025 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு: மைசூரில் விவசாயியை தாக்கிய மூன்று வயது பெண் புலியை வனத்துறையினர் பிடித்தனர்.
மைசூரு மாவட்டம், சரகூரின் படகல்புராவில் கடந்த 16ம் தேதி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மகாதேவகவுடாவை, புலி தாக்கியது.
அவர் படுகாயம் அடைந்தார். மைசூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புலியை பிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, அபிமன்யு, மகேந்திரா ஆகிய இரு யானைகள், இரண்டு நாட்களாக புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டது. நேற்று காலை இதே கிராமத்தில் வயல் பகுதியில், இருந்த புலிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
புலி பிடிபட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

