ADDED : ஆக 25, 2026 01:14 AM

விஜயநகரா: விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட்டின் எலகுடா பகுதியில் புலியை பார்த்ததாக உள்ளூர் மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கிஷ்கிந்தா மலையின் வனப்பகுதியில் வனத்துறையினர் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் புலியின் நடமாட்டத்தை உறுதி செய்தனர்.
வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலமான ஹம்பி அருகில் உள்ள வனப்பகுதியில் புலியை கண்டுள்ளனர். புலி இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கொப்பால் வனத்துறைக்கு உட்பட்ட சனபுரா, பசபுரா, ஜப்பல்குடா, பெனக்கல், அகோலி, வெங்கடகி, ஹனுமானஹள்ளி, ஜங்கிளிரங்கபுரா உட்பட பல பகுதிகளில் சைரன்கள் மூலம் மக்களை எச்சரித்து உள்ளனர்.
இரவில் வெளியில் உறங்குவதை தவிர்க்கவும், கால்நடைகளை மேய்க்கும் இடத்தில் புலியை பார்த்தாலோ அல்லது அதன் நடமாட்டம் குறித்து தகவல் அறிந்தாலோ உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
