sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 இன்று இனிதாக...  பெங்களூரு

/

 இன்று இனிதாக...  பெங்களூரு

 இன்று இனிதாக...  பெங்களூரு

 இன்று இனிதாக...  பெங்களூரு


ADDED : பிப் 11, 2026 05:46 AM

Google News

ADDED : பிப் 11, 2026 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மஹா சிவராத்திரி

 மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ருத்ராபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், விபூதி அலங்காரம், சிறப்பு பூஜைகள், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - காலை 9:00 மணி; ஸ்ரீ சதாசிவ பெருமானுக்கு லிங்கராஜபுரம் கிராமம், சந்தான வேணுகோபால சுவாமி தேர் கோவிலில் இருந்து நகர்வலம் வந்து ஸ்ரீகிருஷ்ண கலச தீர்த்த அபிஷேகம் - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ சதாசிவ கோவில், கே.எஸ்.எப்.சி., லே - அவுட் அருகில், லிங்கராஜபுரம். தொடர்புக்கு : 96800 72329.

அதிருத்ரம் 2026

 ஸ்ரீராமகிருஷ்ணா பஜனை சபா அறக்கட்டளை சார்பில் 'அதிருத்ரம் 2026' விழாவை ஒட்டி, கணபதி ஹோமம் - காலை 5:30 மணி; மஹன்யாச ஜெபம், அதிருத்ர ஜெபம், அபிஷேகம், அதிருத்ர சங்கல்பம், கிராமார்ச்சனை தச தானம், ருத்ர ஹோமம், வசூர்தாரா, பூர்ணாஹூதி - 6:30 முதல் மதியம் 1:30 மணி வரை; பகவத் பிரசாதம் - 2:00 மணி. இடம்: சூர்யநாராயணா கல்யாண மண்டபம், தொம்மலுார், பெங்களூரு.

பிரம்ம ரதோத்சவம்

 ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி பிரம்ம ரதோத்சவத்தை ஒட்டி, மஹா அபிஷேகம் - காலை 9:00 மணி; பல்லக்கு திருவிழா - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 15வது குறுக்கு சாலை, மல்லேஸ்வரம்.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

ஆடைகள் கண்காட்சி

 'அபிவிருத்தி' சார்பில் பட்டு, பருத்தி, கைத்தறி சேலைகள் கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: நஞ்சராஜ பகதுார் கல்யாண மண்டபம், வினோபா சாலை, மைசூரு.

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை

 கன்னடா, இந்தி ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சில்லா தி கார்டன் கபே, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

 ஜாம் வித் பரத் சிஜே - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: நேடிவ் பார் அண்ட் இந்தியன் கிட்சன், 421 கியூ, ஸ்ரீகிருஷ்ணா டெம்பிள் சாலை, முதலாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.

 தெலுங்கு ஜாமிங் - இரவு 7:00 மு தல் 10:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 95, மூன்றாவது தளம், 15வது குறுக்கு சாலை, எச்.எ ஸ்.ஆர்., லே - அவுட்.

 குட்லா எக்ஸ் கொடவா - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: வேப்பர் இந்திரா நகர், 773, 100 அடி சாலை, எச்.ஏ.எல்.,இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.

 ஓபன் மைக் - இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: ஹட்டில் காபி கோ, 262, கெம்பே கவுடா சாலை, பக்ருதி லே - அவுட், பெங்களூரு.

 லேடீஸ் நைட் - இரவு 8:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், 8, இரண்டாவது தளம், அல்லய்டு கிராண்ட் பிளாசா, அசோக் நகர்.

காமெடி

 காமெடி நைட் - இரவு 7:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், இரண்டாவது தளம், பிரிகேட் சாலை, சாந்தாலா நகர்.

 இம்ப்ரூவ் காமெடி ஜாம் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: சர்ச் ஸ்டிரீட் சோஷியல், 46/1, நான்காவது சர்ச் தெரு, சாந்தாலா நகர், அசோக் நகர்.

 வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை நான்காவது பிளாக், கோரமங்களா.

 மிட்நைட் காமெடி - இரவு 11:00 மணி முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர் சர்ச் ஸ்டிரீட், 205, பிரிகேட் கார்டன்ஸ், இரண்டாவது தளம், சாந்தாலா நகர், அசோக் நகர்.

 ஜோக்ஸ் ஆஜ் கல் - இரவு 9:30 முதல் 10:45 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 80 அடி சாலை, எஸ்.டி.,பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.






      Dinamalar
      Follow us