ADDED : ஜூலை 11, 2026 11:24 PM
ஆன்மிகம் மண்டல பூஜை ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.
சொற்பொழிவு சுவாமி முக்திதானந்தாஜியின் கன்னடத்தில் சொற்பொழிவு - மாலை 6:00 முதல் 6:50 மணி வரை. இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமம், யாதவகிரி, மைசூரு.
லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது கைவினை பொருட்கள் கண்காட்சி குஜராத் அரசின் குஜராத் கைவினை பொருட்கள் உத்சவத்தை ஒட்டி, குஜராத் பாரம்பரிய உடைகள் கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., அர்பன் ஹட், வட்ட சாலை, ஹெப்பால் தொழிற் பகுதி, மைசூரு.
ஆயுர்வேத சிகிச்சை முகாம் ஜே.எஸ்.எஸ். ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் முதுகுவலி, கழுத்து வலிக்கான அக்குபஞ்சர், யோகா முகாம் - காலையில். இடம்: மருத்துவமனை வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு 0821 - 2548231, மொபைல் எண் 96320 00697.
அறிவு தினம் தங்கவயலுக்கு அம்பேத்கர் வந்து சென்ற தினத்தை தங்கவயலில் அறிவு தினமாக கொண்டாடப்படுகிறது. காலை 10:30 மணி. இடம்: அம்பேத்கர் பூங்கா, நீதிமன்றம் அருகே, ராபர்ட்சன் பேட்டை.
சிறப்பு நிகழ்ச்சி தென்னிந்திய பவுத்த சங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி; காலை 11:00 மணி. இடம்: சாம்பியன் ரீப், தங்கவயல்.
மாரத்தான் ஓட்டம் பெஸ்ட் எனும் பிஹைண்ட் எக்ஸலண்ட் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் அமைப்பு சார்பில் தங்கவயல் புகழ் போற்றும் மாரத்தான் ஓட்டம். காலை: 6:00 மணிக்கு 70 கி.மீ., ஓட்டம். காலை: 6:15 மணிக்கு 50 கி.மீ., ஓட்டம். காலை 6:30 மணிக்கு 25 கி.மீ., ஓட்டம். துவங்கும் இடம் மற்றும் நிறைவடையும் இடம்: நகராட்சி மைதானம், ராபர்ட்சன் பேட்டை.
ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா அம்பேத்கர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் பாராட்டு விழா. காலை: 10:30 மணி. இடம்: அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளி, கோரமண்டல், தங்கவயல்.
