ADDED : ஜூலை 25, 2026 12:30 AM
ஆன்மிகம்
ஆடி ஏகாதசி மற்றும் கல்யாண உத்சவம்
பாண்டுரங்க சமாஜ் சார்பில் ஆடி ஏகாதசி மற்றும் கல்யாண உத்சவத்தை ஒட்டி, சரஸ்வதி கோபாலகிருஷ்ணன் குழுவினரின் பஜனை வடிவில் சம்பூரண நாராயணீயம் - காலை 8:00 மணி; ஆதித்யம் - மதியம் 1:30 மணி; ரமணி - கிருஷ்ணன் குழுவினரின் பஜனை வடிவில் அபங் திவ்யநாமம் சங்கீர்த்தனம் - மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ சீதா ராமா கல்யாண மண்டபம், சுப்பையனபாளையா எக்ஸ்டென்ஷன், பானஸ்வாடி பிரதான சாலை, பெங்களூரு. தொடர்புக்கு 98455 50693.
45ம் ஆண்டு, வேத பாராயண மஹோத்சவம்
ஸ்ரீவித்யா அறக்கட்டளை பவுண்டேஷன் 45ம் ஆண்டு, வேத பாராயண மஹோத்சவத்தை ஒட்டி, சாஸ்தா அஷ்டபதி, ஸ்ரீராமசந்திர பாகவதர், சம்பிரதாய பஜனை வித்யாலயம் மாணவர்கள் இணைந்து நடத்தும் பூர்ண புஷ்பகலா கல்யாண மஹோத்சவம் - காலை 8:00 மணி; தீபாராதனை, பகவத் பிரசாதம் - மதியம் 1:00 மணி; தர்மசாஸ்தா சரித்திரம் தொடர்பான கேள்வி பதில், சாஸ்த்ரு அஸ்தபடி, சாஸ்தா பிரீத்தி - 2:00 முதல் 3:00 மணி வரை; பூர்ணிமா ஸ்ரீகாந்தின் சங்கீத உபன்யாசம் - 3:00 முதல் மாலை 4:00 மணி வரை; தமிழில் துஷ்யந்த் ஸ்ரீதரின், 'உன் சுந்தர காண்டம்' சொற்பொழிவு - 5:00 முதல் இரவு 7:00 மணி வரை; தீபாராதனை, பகவத் பிரசாதம் வழங்கல் - 7:00 மணி. இடம்: ஸ்ரீ சூர்யநாராயண சுவாமி கோவில் கல்யாண மண்டபம், தொம்மலுார், பெங்களூரு. தொடர்புக்கு 99019 35506.
மண்டல பூஜை
ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.
பவித்ரோத்சவ மஹோற்சவம்
தேவதைகள் பிரார்த்தனை, ஸ்வஸ்திக் புண்ணியாஹ வாச்சனா, ஆச்சார்யா ருத்விக், வருணா, ஷால வாஸ்து, பஞ்ச கவ்யா பிரசன்னா, ரக்ஷாராதனை, அங்குரார்பனா, அக்னி பிரணயனா, கும்பாராதனை, பவித்ர பிரதிக்ஷா, பவித்ர வாஸ்து, சயனாதிவாசா, ஹோமங்கள், நிவேதனா, ஆரத்தி, பிரசாத வினியோகம் - மாலை 5:00 மணி. இடம்: பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவில், கீதா சாலை, ராபர்ட்சன் பேட்டை.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
பொது
கதை சொல்லுதல்
கலாசுருச்சி சார்பில் எழுத்தாளர் சவுமியா கோட்டியின் 'கதை கேட்கலாம் வாங்க' கதை சொல்லுதல் - மாலை 4:30 முதல் 5:30 மணி வரை. இடம்: சுருச்சி ரங்கமனே, 476, சித்ராபானு சாலை, குவெம்பு நகர், மைசூரு. தொடர்புக்கு 92435 81097.
