/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டினர் கட்டிய கழிப்பறை
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டினர் கட்டிய கழிப்பறை
அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டினர் கட்டிய கழிப்பறை
அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டினர் கட்டிய கழிப்பறை
ADDED : ஆக 16, 2025 05:01 AM

உடுப்பி: உடுப்பி நகருக்கு, பயிற்சிக்காக வந்த வெளி நாட்டவர், அரசு பள்ளி மாணவர்களுக்கு கழிப்பறை கட்டிக் கொடுத்து உதவினர்.
இந்திய சுற்றுலா தலங்கள் மீது, வெளி நாட்டவருக்கு மிகவும் விருப்பம். பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கின்றனர். இங்குள்ள உணவை ருசிக்கின்றனர். சிலர் நற்பணிகளை செய்வதுண்டு. அதே போன்று உடுப்பியில், முன் மாதிரியான பணிகளை செய்துள்ளனர்.
வெளிநாட்டை சேர்ந்த சிலர், பயிற்சிக்காக உடுப்பி மாவட்டம், பைந்துாருக்கு வந்துள்ளனர். கன்யானா கிராமத்தின் அரசு பள்ளிக்கு வந்தனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்தனர், அவர்களோடு விளையாடி மகிழ்ந்தனர். இரண்டு மாதங்களாக கிராமத்தில் தங்கியிருந்தனர்.
ஊரை விட்டுச் செல்லும் போது, மாணவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என, முடிவு செய்தனர். கழிப்பறை இல்லாமல், மாணவர்கள் அவதிப்படுவதை கவனித்தனர்.
தங்கள் செலவில் நவீன கழிப்பறை கட்டிக்கொடுத்தனர். கிராமத்தில் வெளிநாட்டவர் கழிப்பறை கட்டும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. பலரும் வெளிநாட்டவரின் பணியை பாராட்டினர்.