தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரில் நாளை மாரத்தான்; போக்குவரத்தில் மாற்றம்

 பெங்களூரில் நாளை மாரத்தான்; போக்குவரத்தில் மாற்றம்

 பெங்களூரில் நாளை மாரத்தான்; போக்குவரத்தில் மாற்றம்


ADDED : செப் 26, 2026 03:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 03:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் நாளை மாரத்தான் ஓட்டம் நடப்பதால், பிரதான சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரில் நாளை மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடக்கிறது. பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் அதிகாலை 4:00 மணிக்கு தொடங்கி 42 கி.மீ., வரை சென்று மீண்டும் கன்டீரவா ஸ்டேடியத்தில் நிறைவு பெறுகிறது. இதனால், அதிகாலை 4:00 மணி முதல் காலை 11:00 மணி வரை, நகரின் முக்கிய பிரதான சாலைகள் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.

அதாவது கஸ்துார்பா சாலையில் ஹட்சன் சதுக்கம் - குயின்ஸ் சதுக்கம் வரை; எம்.ஜி., சாலையில் குயின்ஸ் சதுக்கம் - மேயோ ஹால் சதுக்கம்; குயின்ஸ் சாலையில் குயின்ஸ் சதுக்கம் - சி.டி.ஓ., சதுக்கம் - இரு வழிகளிலும்.

சென்ட்ரல் ஸ்ட்ரீட் சாலையில் அனில் கும்ப்ளே சதுக்கம் - சென்ட்ரல் ஸ்ட்ரீட்; லோக் பவன் சாலையில் சி.டி.ஓ., சதுக்கம் - போலீஸ் திம்மையா சதுக்கம்.

அம்பேத்கர் சாலையில் போலீஸ் திம்மையா சதுக்கம் - கே.ஆர்., சதுக்கம் வரை; கப்பன் சாலையில் சி.டி.ஓ., சதுக்கம் - மணிப்பால் சதுக்கம்; டிக்கன்சன் சாலையில் ஹலசூரு சதுக்கம் - டிக்கன்சன் சாலை; அஜந்தா சாலையில் ஸ்ரீ சதுக்கம் - ஆர்.பி.ஐ., சதுக்கம்; செயின்ட் ஜான்ஸ் சாலையில் நாகா சதுக்கம் - ஸ்ரீ சதுக்கம்; கென்சிங்டன் சாலையில் காமதேனு சதுக்கம் - கென்சிங்டன் சதுக்கம்.

கங்காதர் ஷெட்டி சாலையில் திருவள்ளுவர் சதுக்கம் - குருத்வார் சதுக்கம்; காமராஜ் சாலையில் காவேரி எம்போரியம் - டிக்கன்சன் சதுக்கம் வரை வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.

அனுமதியில்லை ஜே.சி., சாலை, நிருபதுங்கா சாலையிலிருந்து எம்.ஜி., ரோடு மற்றும் ஹலசூரு நோக்கி செல்லும் வாகனங்கள், ஹெச்.எல்.டி., சதுக்கத்தில் வலது பக்கம் திரும்பி, ஹட்சன் சதுக்கம், தேவாங்க சதுக்கம் வழியாக சென்று, இடதுபுறம் திரும்பவும். பின், மிஷன் ரோடு மேம்பாலம் வழியாகவோ அல்லது சாந்திநகர் சதுக்கம் வழியாக ரிச்மென்ட் சதுக்கம், ரெசிடென்சி சாலையை அடையலாம்.

ஜே.சி., சாலையிலிருந்து விதான் சவுதா, சிவாஜிநகர், ராஜ்பவன் சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், போலீஸ் கார்னர் - கே.ஜி., சாலை - ஓல்ட் போஸ்ட் ஆபிஸ் சாலை, கே.ஆர்., சதுக்கம் வழியாக சென்று, அம்பேத்கர் சாலையின் மேற்கு பகுதியாக செல்லவும்.

குயின்ஸ் சாலை, சிவாஜிநகரிலிருந்து மெஜஸ்டிக், கே.ஆர்., மார்க்கெட் நோக்கி செல்லும் வாகனங்கள், பாலேகுந்திரி சதுக்கம், கன்னிங்காம் சாலை, சந்திரிகா சந்திப்பு, எல்.ஆர்.டி.இ., சதுக்கம், பசவேஸ்வரா சதுக்கம் வழியாக செல்லவும்.

ஸ்ரீ சதுக்கத்திலிருந்து ஆர்.பி.ஐ., சதுக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள், செயின்ட் ஜான்ஸ் சாலை வழியாக செல்லவும். நாகா சந்திப்பில் வலது புறம் திரும்பி, போர் நினைவு சந்திப்பு, கென்சிங்டன் சாலை வழியாக ஹலசூரு மற்றும் இந்திரா நகரை அடையலாம்.

சிவாஜிநகர் வாகனங்கள் ஓசூர் ரோடு, கோரமங்களா, ஆடுகோடியிலிருந்து விமான நிலைய சாலை மற்றும் சிவாஜிநகர் நோக்கி செல்லும் வாகனங்கள், அசோக்நகர் சிக்னல் வழியாக சென்று, ரிச்மென்ட் சாலை நோக்கி இடது புறம் திரும்பவும். ஆர்.ஆர்.எம்.ஆர்., சாலை, ஹட்சன் சதுக்கம், கே.ஜி., ரோடு, மைசூரு வங்கி சதுக்கம், அரண்மனை சாலை, பசவேஸ்வரா சதுக்கம் வழியாக பயணத்தை தொடரலாம்.

எம்.ஜி., சாலையிலிருந்து பாஸ்கரன் சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், காமதேனு சதுக்கம், சுவாமி விவேகானந்தா சாலை, ராமையா சந்திப்பு, ஆதர்ஷா சந்திப்பு வழியாக சென்று பழைய மெட்ராஸ் ரோடு மூலம் பயணிக்கலாம்.

கஸ்துார்பா சாலை, ஆர்.ஆர்.எம்.ஆர்., சாலை, விட்டல் மல்லையா சாலை, எம்.ஜி., சாலை, சென்ட்ரல் தெரு, குயின்ஸ் சாலை, லோக் பவன் சாலை, இன்பான்டரி சாலை, அம்பேத்கர் சாலை, கப்பன் சாலை,

காமராஜ் சாலை, டிக்கென்சன் சாலை, கங்காதர் ஷெட்டி சாலை, பாஸ்கரன் சாலை, வார் மெம்மோரியல் சதுக்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஆர்.பி.ஐ., சதுக்கம், செயின்ட் ஜான்ஸ் சாலையில் வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது.

யு .பி., சிட்டி மால், சுதந்திர பூங்கா, புனித வளனார் கல்லூரி மைதானம், கருடா மால், ஒன் எம்.ஜி., மாலில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்ப டுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us