UPDATED : நவ 08, 2026 12:00 AM
ADDED : நவ 07, 2026 08:54 PM

பெங்களூரு: இம்முறை தீபாவளியில், அத்திப்பள்ளியில் பட்டாசு கடைகளில் விற்பனை குறைந்ததால், வியாபாரிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.
பெங்களூரு - ஓசூர் எல்லையில் உள்ள அத்திப்பள்ளி, பட்டாசு விற்பனைக்கு பிரசித்தி பெற்ற இடமாகும். ஆண்டுதோறும் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே, பட்டாசு விற்பனை களை கட்டும்.
வாடிக்கையாளர்கள் அதிகம் பட்டாசு வாங்குவர். விற்பனை அதிகரித்து வியாபாரிகளுக்கு, லாபமும் கிடைத்தது. ஆனால் நடப்பாண்டு விற்பனை 30 சதவீதம் குறைந்துள்ளது என, பட்டாசு வியாபாரிகள் கூறுகின்றனர்.
தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, பசுமை பட்டாசுகள் விற்பதை கட்டாயமாக்கியது, விலை அதிகரிப்பு, மழை போன்ற காரணங்களால், பட்டாசு விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
