தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ராகுலுடன் தந்தை பேசியது என்ன? அமைச்சர் யதீந்திரா விளக்கம்

ராகுலுடன் தந்தை பேசியது என்ன? அமைச்சர் யதீந்திரா விளக்கம்

ராகுலுடன் தந்தை பேசியது என்ன? அமைச்சர் யதீந்திரா விளக்கம்


UPDATED : நவ 08, 2026 12:00 AM

ADDED : நவ 07, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2026 12:00 AM ADDED : நவ 07, 2026 09:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: ‘‘என் தந்தையும், ராகுலும் என்ன பேசிக் கொண்டனர் என்பது எனக்கு தெரியாது,’’ என அமைச்சர் யதீந்திரா தெரிவித்தார்.

மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

டில்லியில் ராகுலை சந்திக்க என் தந்தையும், நானும் சென்றிந்தோம். ஆனால், அவருடன் என் தந்தை மட்டுமே பேசினார். அவர்கள் எதை பற்றி பேசினர் என்பது எனக்கு தெரியாது.

என் தந்தை மீதான ரகசிய வீடியோ விவகாரத்தில் அவர் பொறுமையாக உள்ளார். அரசின் மீது முழு நம்பிக்கை வைத்து உள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் உறுதியாக உள்ளார்.

வீடியோவை பதிவேற்றம் செய்தவர்கள், அதனை நகல் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் விலை உயர்வு தவிர்க்க முடியாதவை. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது. இதனால் பஸ் கட்டணங்களும் உயர்த்தப்பட்டு உள்ளன.

பால் விலை உயர்வு வறட்சி காலத்தில் விவசாயிகளுக்கு பயனளிக்கும். விலை உயர்வில் 8 ரூபாயில் ஏழு ரூபாய் பால் உற்பத்தியாளர்களுக்கு செல்லும். வாக்குறுதி திட்டங்களால் விலை உயர்த்தப்படவில்லை.

கடந்த வாரம் மஹாதேவப்பாவை சந்தித்து விவாதித்தேன். வரும் 26ம் தேதி நடக்கும் அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தில் பங்கேற்று ஒத்துழைக்கும்படி கேட்டு கொண்டேன்.

அதற்கு அவர், ‘அதில் பங்கேற்க மாட்டேன். அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பேன்’ என்று கூறினார். மஹாதேவப்பாவுக்கும், என் தந்தைக்கும் இடைய நல்ல உறவு உள்ளது. சில கருத்து வேறுபாடுகளால் உறவு கெட்டுப்போகாது.

மைசூரு சிம்மாசனம் அரசுக்கு சொந்தமானது என்று நான் கூறவில்லை. அதற்கான வாடகையை செலுத்துகிறோம் என்று கூறியிருந்தேன்.

அரண்மனையை மஹாராஜா கட்டவில்லை என்று கூறவில்லை. அரண்மனையும் மக்களின் வரிப்பணத்தில் தான் கட்டப்பட்டது. எனவே, அனைத்தும் மக்களுக்கு சொந்தமாக இருக்க வேண்டும்.

அது அரசாக இருந்தாலும் சரி, மன்னர் ஆட்சியாக இருந்தாலும் சரி, அனைத்தும் மக்களால் தான் நடத்தப்படுகின்றன. எனவே, அனைத்தும் மக்களுக்கு சொந்தமானது.

இந்தாண்டு தசரா விழாவில் சில குழப்பங்கள் ஏற்பட்டன. வரும் நாட்களில் முதல்வருடன் பேசி, அனைத்து குழப்பங்களும் தீர்த்து வைக்கப்படும். இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை கிடைத்ததும், நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us