தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரயிலில் இடம் பிடித்து தகராறு: தங்கவயல் டி.எஸ்.பி., எச்சரிக்கை

 ரயிலில் இடம் பிடித்து தகராறு: தங்கவயல் டி.எஸ்.பி., எச்சரிக்கை

 ரயிலில் இடம் பிடித்து தகராறு: தங்கவயல் டி.எஸ்.பி., எச்சரிக்கை


ADDED : ஜூலை 21, 2026 03:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 03:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: மாரிகுப்பத்தில் இருந்து பெங்களூரு செல்லும் ரயிலில், பயணியருக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தங்கவயல் டி.எஸ்.பி., லட்சுமையா கூறியதாவது:

தங்கவயல் மாரிகுப்பத்தில் இருந்து கே.எஸ்.ஆர்., பெங்களூரு செல்லும் ரயிலில் தினப் பயணியருக்கு தொல்லை கொடுக்கும் வகையில், இடம் பிடித்து தகராறு செய்வது, பெண்களை கேலி செய்வது போன்ற புகார்கள் வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மாரிகுப்பத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூரு செல்லும் ரயிலில் முன் பதிவு கிடையாது. இதை உணர வேண்டும். பயணியர் அமர சீட் இருந்தால் இடம் தரவேண்டும்.

சந்தேகப்படும்படி சட்ட விரோத பொருட்களை கொண்டு செல்வது குறித்து தெரிந்தால், போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

புகார் கூறுவோர் பற்றிய தகவலை வெளிப்படுத்த மாட்டோம். பயணியர் பாதுகாப்பே மிக முக்கியம். பாதுகாப்புக்காக 112 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us