/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டிராவல் ஏஜென்சி உரிமையாளர் தற்கொலை
/
டிராவல் ஏஜென்சி உரிமையாளர் தற்கொலை
ADDED : டிச 21, 2025 05:22 AM
பெங்களூரு: டிராவல் ஏஜென்சி உரிமையாளர், ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
உடுப்பி மாவட்டம் பிரம்மாவரா தாலுகாவை சேர்ந்தவர் கிஷோர் குமார் ஷெட்டி, 40. இவர் பல ஆண்டுகளுக்கு முன், உடுப்பியில் இருந்து பெங்களூரு வந்து, கோவிந்தராஜ நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பங்குதாரர்களுடன் சேர்ந்து, டிராவல் ஏஜென்சி நடத்தினார்.
இதில் நஷ்டம் அடைந்தார். மற்றொரு பக்கம் தொழில் பங்குதாரர்கள், லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்தனர். இது குறித்து, கோவிந்தராஜ நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நாளுக்கு நாள் பணப்பிரச்னை அதிகரித்தது.
பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும், அவரிடம் பணம் இல்லை. பொருளாதார பிரச்னையால், மனம் நொந்த கிஷோர்குமார் ஷெட்டி, நேற்று முன் தினம் இரவு, கிருஷ்ணதேவராயா ரயில் நிலையம் அருகில், ஓடும் ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார்.
சிட்டி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

