ADDED : ஜூன் 12, 2025 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சியில் இருந்து பெங்களூரு இடையே தினசரி விமானங்களை, 'இண்டிகோ' மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. இந்த மார்க்கத்தில் பயணியர் வருகை எப்போதும் அதிகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் முன்பு திருச்சியில் இருந்த பெங்களூருக்கு காலை 8:55 மணிக்கு விமானங்களை இயக்கி வந்தது. இந்நிலையில் அந்த நேரம் மதியமாக மாற்றப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து தினசரி மதியம் 1:00 மணிக்கு புறப்படும் விமானம் 2:00 மணிக்கு திருச்சி வந்து சேரும்.
திருச்சியில் இருந்து மதியம் 2:50 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 4:05 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த மாற்றம் தற்காலிகமானது என ஏ.ஐ.எக்ஸ்., விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
- நமது நிருபர் -