/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'சுரங்கப்பாதை திட்டத்தால் லால்பாக் பூங்காவிற்கு ஆபத்து'
/
'சுரங்கப்பாதை திட்டத்தால் லால்பாக் பூங்காவிற்கு ஆபத்து'
'சுரங்கப்பாதை திட்டத்தால் லால்பாக் பூங்காவிற்கு ஆபத்து'
'சுரங்கப்பாதை திட்டத்தால் லால்பாக் பூங்காவிற்கு ஆபத்து'
ADDED : அக் 08, 2025 12:49 AM

பெங்களூரு : 'பெங்களூரின் சுரங்கப்பாதை திட்டத்தால், லால்பாக் பூங்காவிற்கு ஆபத்து' என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறி உள்ளார்.
பெங்களூரு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஹெப்பாலில் இருந்து சென்ட்ரல் சில்க் போர்டு வரை, சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு விரும்புகிறது. இத்திட்டம் 26,000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இத்திட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அசோக், தன் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
ஆபத்தில் லால்பாக்; துணை முதல்வர் சிவகுமாரின் சுரங்கப்பாதை என்ற பைத்தியகாரத்தனத்திற்கு நன்றி. பெங்களூரின் பெருமையான லால்பாக் தாவரவியல் பூங்கா, சிவகுமாரால் முன்னெடுக்கப்படும் சுரங்கப்பாதை திட்டத்தால் பெரும் ஆபத்து, அச்சுறுத்தலுக்கு இலக்காகி உள்ளது.
ஒரு மனிதனின் விளம்பரம், வீண் பெருமைக்காக, சுரங்கப்பாதை மூலம் லால்பாக் பூங்கா 6 ஏக்கர் நிலத்தை இழக்க உள்ளது.
இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, காங்கிரஸ் அரசு திட்டத்தை செயல்படுத்த துடிப்பது ஏன்?
லால்பாக், நகரின் ஆன்மா. குழந்தைகளுக்கு ஆக்சிஜன் கொடுக்கும் பொக்கிஷம். அரசியலுக்காக லால்பாக்கை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை. லால்பாக்கை பாதுகாக்க பெங்களூரு மக்களுடன், பா.ஜ., கைகோர்க்கும். இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.