ADDED : செப் 17, 2026 11:17 PM
ஹூப்பள்ளி: ஒரே நாளில், இரண்டு ஏ.டி.எம்., மையங்களில், மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்தது.
ஹூப்பள்ளி நகர் அருகில் உள்ள, பாஹட்டி கிராமத்தில் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, இங்கு வந்த மர்ம கும்பல், காஸ் கட்டரை பயன்படுத்தி, ஏ.டி.எம்., இயந்திரங்களை உடைத்தனர். அதில் இருந்த 11 லட்சம் ரூபாயை, திருடி தப்பியோடினர்.
அதன் பின், சுள்ளா கிராமத்தில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் நுழைந்த மர்ம கும்பல், காஸ் கட்டரை பயன்படுத்தி, ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, மூன்று லட்சம் ரூபாயை திருடி தப்பியது.
இரண்டு ஏ.டி.எம்.,களிலும், கண்காணிப்பு கேமராக்களை, அந்த கும்பல் உடைத்திருந்தன. நேற்று காலை பணம் எடுக்க வந்தவர்கள், திருட்டு நடந்திருப்பதை அறிந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
எஸ்.பி., வினோத் முக்தேதார், திருட்டு நடந்த ஏ.டி.எம்.,களை பார்வையிட்டார். மர்ம கும்பலை போலீசார் தேடுகின்றனர்.
