/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வீடு புகுந்து திருடிய இருவர் கைது
/
வீடு புகுந்து திருடிய இருவர் கைது
ADDED : செப் 09, 2025 05:04 AM

தங்கவயல்: கோவில் மற்றும் வீடுகளில் திருடப்பட்ட 3 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ஒரு பைக் ஆகியவற்றை போலீசார் மீட்டு, இருவரை கைது செய்தனர்.
காமசமுத்திரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கோவில் மற்றும் சிலரது வீடுகளில் திருட்டு நடந்துள்ளது.
காமசமுத்திரம் போலீசார் விசாரணை நடத்தி ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், நிம்மகம்ப்ளி கிராமத்தின் சின்னசாமி, 57, தமிழகத்தின் சேலம் மாவட்டம், மேட்டூர் கிராமத்தின் மணி, 55, ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 34 கிராம் தங்க நகைகள், 380 கிராம் வெள்ளி பொருட்கள், ஒரு பைக் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். இவற்றின் மதிப்பு 3 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய்.