ADDED : ஏப் 14, 2025 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோலார் : சீமைப்பசு ஒன்று இரட்டை தலை கொண்ட கன்று ஈன்றது. அதிசயமான கன்றை காண, மக்கள் கூட்டம், கூட்டமாக வருகின்றனர்.
கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகாவின், ராமசந்திரா கிராமத்தில் வசிப்பவர் விவசாயி எல்லப்பா. இவர் சீமைப்பசு ஒன்றை வளர்க்கிறார். கர்ப்பம் தரித்த பசு, கன்று ஈன்றது. இந்த கன்று இரண்டு தலைகள், இரண்டு வாய், இரண்டு காதுகள், நான்கு கண்கள் கொண்ட அதிசய உருவத்தில் இருந்தது.
முதன் முறையாக இரண்டு தலைகள் கொண்ட கன்றை பார்த்த அப்பகுதியினர், தங்கள் மொபைல் போனில் போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அதிசய கன்றை பார்க்க, சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும், மக்கள் கூட்டம், கூட்டமாக வருகின்றனர். கால்நடை டாக்டர், கிராமத்துக்கு வந்து பசு, கன்றின் ஆரோக்கியத்தை பரிசோதித்தனர். ஆரோக்கியமாக உள்ளதாக கூறினர்.

