/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜூன் 18ல் சென்னையை சேர்ந்த உமா குமாரின் 'அபாங்' இசை நிகழ்ச்சி
/
ஜூன் 18ல் சென்னையை சேர்ந்த உமா குமாரின் 'அபாங்' இசை நிகழ்ச்சி
ஜூன் 18ல் சென்னையை சேர்ந்த உமா குமாரின் 'அபாங்' இசை நிகழ்ச்சி
ஜூன் 18ல் சென்னையை சேர்ந்த உமா குமாரின் 'அபாங்' இசை நிகழ்ச்சி
ADDED : ஜூன் 15, 2025 03:53 AM

பெங்களூரு: சென்னையை சேர்ந்தவரும், சுவிட்சர்லாந்தில் வசித்து வருபவருமான உமா குமாரின் 'அபாங்' இசை நிகழ்ச்சி, ஜூன் 18ல் நடக்கிறது.
சென்னையை சேர்ந்தவர் உமா குமார். கர்நாடக இசை மற்றும் அபாங் பாடகி. கர்நாடக இசைக்கலைஞர் சாத்துார் ஏஜி.சுப்பிரமணியம் அய்யரின் பேத்தி. ஏழு வயதில் இருந்தே கர்நாடக இசையை உமா கற்க துவங்கினார். தனது தாய் லட்சுமி சுந்தரத்திடம் அடிப்படைப் பயிற்சியைப் பெற்றார்.
கர்நாடக இசையில் முதுகலை பட்டம் பெற்றவர். 'சாய் கான சரஸ்வதி' என்ற பட்டமும் பெற்றுள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது சுவிட்சர்லாந்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
பாரிஸில் உள்ள, '2024 ஒலிம்பிக் ரசிகர் மண்டலம்' உட்பட, 'அபாங்' இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.
நடப்பாண்டு முழுவதும் ஒவ்வொரு விழாவிற்கும் ஒரு இசை வீடியோவை வெளியிட முடிவு செய்துள்ளார். 'உமா குமார் உத்சவம் 36+' என்ற புதிய இசை முயற்சியை துவக்கி உள்ளார். இவரின் 'அபாங்' இசை நிகழ்ச்சி, பெங்களூரு தொம்மலுாரில் உள்ள பெங்களூரு இன்டர்நேஷனல் மையத்தில், வரும் 18ம் தேதி இரவு 7:00 முதல் 9:00 மணி வரை நடக்கிறது.
அவருடன் இசை கலைஞர்கள் பிரதேஷ் ஆச்சார், ஜெகதீஷ் குர்த்கோடி, வெங்கடேஷ் புரோஹித், யஷ்வந்த் ஹம்ஹிஹோலி பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியை ரசிக்க விரும்புவோர், 92893 94028 என்ற மொபைல் போனில் தொடர்பு கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.