அரசு அலுவலகத்தில் லாக்கரை துாக்க முடியாமல் கும்பல் ஓட்டம்
அரசு அலுவலகத்தில் லாக்கரை துாக்க முடியாமல் கும்பல் ஓட்டம்
ADDED : ஜூன் 06, 2026 11:42 PM

கலபுரகி: ஆளந்தா நகரில் உள்ள, அரசு அலு வலகத்தில் மர்ம கும்பல் திருட முயற்சித்தது. லாக்கரை திறக்க முடியாததால், பணம் தப்பியது.
கலபுரகி மாவட்டம் , ஆளந்தா தாலுகாவின், இதய பகுதியில், பஸ் நிலையம் அருகில் ஏ.பி.எம்.சி., அலுவலகம் மற்றும் தபால் அலுவலகம் உள்ளது. நேற்று முன் தினம் நள்ளிரவு, இங்கு வந்த மர்ம கும்பல் ஏ.பி.எம்.சி., கட்டடத்தின் பின் வாசல் வழியாக, அலுவலத்திற்குள் நுழைந்தனர். பணத்தை தேடினர். பணம் கிடைக்காததால்,ஆவணங்கள், கோப்புகளை மூலைக்கொன்றாக வீசினர்.
அதன் பின், தபால் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். ஐந்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் இருந்த லாக்கரின் பூட்டை உடைக்க முயற்சித்தனர்.
முடியாததால், லாக்கரை கஷ்டப்பட்டு வெளியே இழுத்து வந்தனர். ஆனால் இரும்பு லாக்கர் அதிக எடையுடன் இருந்ததால், அவர்களால் இழுத்து செல்ல முடியாமல், அங்கேயே விட்டு தப்பியோடினர்.
லாக்கர் வெளியே கிடப்பதை கண்ட அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த ஆளந்தா போலீசார், கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, மர்ம கும்பலை தேடுகின்றனர்.
அரசு அலுவலகங்களில் திருட்டு மு யற்சி நடந்திருப்பதால், அப்பகுதியினர் கிலி அடைந்துள்ளனர். போலீஸ் ரோந்து அதிகரிக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத் துள்ளனர்.
