/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மொபைல் போனை எடுத்த அக்கா மகனை கொன்ற மாமா
/
மொபைல் போனை எடுத்த அக்கா மகனை கொன்ற மாமா
ADDED : ஜூன் 11, 2025 11:37 PM

சிக்கபல்லாபூர்: தன் மொபைல் போனை எடுத்ததால் ஏற்பட்ட தகராறில், அக்கா மகனை தலையில் கல்லை போட்டு கொன்ற தாய்மாமாவை போலீசார் தேடி வருகின்றனர்.
சிக்கபல்லாபூரின் சிந்தாமணி தாலுகா எஸ்.ரகுட்டஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ், 45. இவரது அக்கா மகன் சுனில், 29. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கூலி வேலை செய்தார். கடந்த 8ம் தேதி இரவு ரமேஷின் மொபைல் போனை, சுனில் எடுத்தார். திரும்ப தரும்படி ரமேஷ் பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. குடும்பத்தினர் சமாதானம் செய்தனர்.
அன்று இரவு வீட்டின் முன்பு துாங்கிய சுனில் தலை மீது, ரமேஷ் கல்லை துாக்கி போட்டுவிட்டு தப்பினார். உயிருக்கு போராடிய சுனில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை 1:00 மணிக்கு இறந்தார். தலைமறைவாக உள்ள ரமேஷை, சிந்தாமணி போலீசார் தேடுகின்றனர்.