/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருமணம் ஆகாத விரக்தி அண்ணன், தம்பி தற்கொலை
/
திருமணம் ஆகாத விரக்தி அண்ணன், தம்பி தற்கொலை
ADDED : ஜூன் 02, 2025 12:44 AM
பெலகாவி : திருமணமாகாத விரக்தியில், சகோதரர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
பெலகாவி மாவட்டம், கோனனகேரி கிராமத்தில் வசித்தவர் சந்தோஷ் ரவீந்திர குன்டே, 55. இவரது தம்பி அன்னாசாஹேப் ரவீந்திர குன்டே, 50. மூத்த மகன் சந்தோஷுக்கு திருமணம் செய்ய, பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். பல ஆண்டுகளாகியும் பெண் கிடைக்காமல் சோர்ந்து போயினர்.
அதன்பின், இளைய மகன் அன்னா சாஹேபுக்கு பெண் பார்க்க துவங்கினர். துரதிர்ஷ்டவசமாக அவருக்கும் பெண் அமையவில்லை. என்ன காரணத்தாலோ, இவர்களுக்கு பெண் கொடுக்க யாரும் முன் வரவில்லை. இதனால், இவர்களுக்கு திருமணம் செய்யும் முயற்சியை, பெற்றோர் நிறுத்தி விட்டனர்.
தங்களுக்கு திருமணமாகாத ஏக்கத்தில், சகோதரர்கள் இருவரும் மது பழக்கத்துக்கு அடிமையாகினர். எப்போதும் குடிபோதையில் இருந்தனர். நேற்று காலை வழக்கம் போல், மது அருந்திய சகோதரர்கள், அதில் விஷம் கலந்து குடித்தனர்.
மயங்கி கிடந்த இவர்களை, குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, இருவரும் உயிரிழந்தனர்.