தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கவர்னர் சுதாவுடன் மேல்சபை தலைவர் சந்திப்பு

கவர்னர் சுதாவுடன் மேல்சபை தலைவர் சந்திப்பு

கவர்னர் சுதாவுடன் மேல்சபை தலைவர் சந்திப்பு


UPDATED : அக் 28, 2026 03:29 AM

ADDED : அக் 28, 2026 12:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 03:29 AM ADDED : அக் 28, 2026 12:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கவர்னர் சுதா யாதவை, மேல்சபை தலைவர் சலீம் அகமது, நேற்று சந்தித்து பேசினார்.

கர்நாடக கவர்னராக சுதா யாதவ் பதவியேற்ற பின், முதன் முறையாக, லோக்பவனில் மேல்சபை தலைவர் சலீம் அகமது நேற்று சந்தித்து பேசினார்.

பின், சலீம் அகமது அளித்த பேட்டி:

கர்நாடக சட்டசபையின் வரலாறு, பாரம்பரியம், சபாநாயகரின் பதவி, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள், சட்டம் இயற்றுவதில் சபையின் பொறுப்பு, வழங்கப்பட்ட ஆலோசனைகள், ஒத்துழைப்பு ஆகியவை குறித்த தகவல்கள் வழங்கப்பட்டன.

அறிவாளிகள், அறிஞர்கள், அனுபவம் வாய்ந்த தனி நபர்கள், கடந்த காலத்தின் புகழ் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர்களின் அனுபவங்களைப் பயன்படுத்தி, சட்டசபை நடவடிக்கைகளுக்கு பதிலளிப்பதில் மன்றத்தின் அணுகுமுறை மதிப்பாய்வு செய்யப்பட்டது.

சாமானிய மக்களின் இன்னல்களுக்கு மன்றம் அளித்த பதில், மக்கள் நல கொள்கைகளை வகுப்பதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கடந்த மாதம் நடந்த சிறப்பு அமர்வில் வறட்சி நிலவரம் குறித்து நடத்தப்பட்ட கலந்துரையாடல், கஸ்துாரி ரங்கன் அறிக்கை அமலாக்கத்தால், மேற்கு தொடர்ச்சி மலை மக்களின் வாழ்வில் ஏற்பட்ட தாக்கம், எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகியவை விளக்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us