தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/குளிர்கால கூட்டத்தொடர் தலைமை செயலர் ஷாலினி கடிதம்

குளிர்கால கூட்டத்தொடர் தலைமை செயலர் ஷாலினி கடிதம்

குளிர்கால கூட்டத்தொடர் தலைமை செயலர் ஷாலினி கடிதம்


UPDATED : அக் 28, 2026 12:00 AM

ADDED : அக் 27, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 12:00 AM ADDED : அக் 27, 2026 11:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ‘பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில், குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்’ என்று, சட்டசபை, மேல்சபை செயலர்களுக்கு, தலைமை செயலர் ஷாலினி கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகாவில் ஆண்டின் துவக்கத்தில் அதாவது பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில், கவர்னர் உரையுடன் பட்ஜெட் தாக்கல் செய்ய கூட்டத்தொடர் நடக்கிறது. பின், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மழைக்கால கூட்டத்தொடரும், டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடரும் நடக்கின்றன .

முதல் இரு கூட்டத்தொடர்கள், பெங்களூரு விதான் சவுதாவிலும், குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி சுவர்ண விதான் சவுதாவிலும் நடக்கிறது. கடந்த 15ம் தேதி முதல்வர் சிவகுமார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 7ம் தேதி துவக்கலாம் என, தற்காலிகமாக முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், மாநில அரசின் தலைமை செயலர் ஷாலினி, சட்டசபை செயலர் விசாலாட்சி, மேல்சபை செயலர் ஸ்ரீமதி ஜோதி ஆகியோருக்கு நேற்று எழுதிய கடிதத்தில், ‘பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் 10 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்’ என, கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us