/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
என்னை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள்: சிவகுமார் உருக்கம்
/
என்னை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள்: சிவகுமார் உருக்கம்
என்னை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள்: சிவகுமார் உருக்கம்
என்னை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள்: சிவகுமார் உருக்கம்
ADDED : செப் 01, 2025 10:09 PM

உடுப்பி : ''என்னை பாறை என அழைக்கின்றனர். பாறை பல விதங்களில் பயன்படுகிறது. அதே போன்று என்னையும், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
உடுப்பி கிருஷ்ணர் மடத்தில் நடந்த விழாவில் துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
நான் என்ன பேசினாலும், அதில் தவறு கண்டுபிடிப்பது அதிகரித்துள்ளது. எனவே, தவறாக எதையும் பேசி விடாமல் காப்பாற்றும்படி, ஸ்ரீகிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்கிறேன். கிருஷ்ணரை தரிசனம் செய்து, மடாதிபதிகளுடன் இணைந்து, மத்வாச்சார்யாரின் தபால் அட்டை வெளியிட, எனக்கு வாய்ப்பு கிடைத்ததை என் பாக்கியம் என்றே கருதுகிறேன்.
தர்மம், பூஜை மற்றும் பக்தி, கண்காட்சியில் வைக்கும் பொருட்கள் அல்ல. அனைவரையும் ஒன்றாக அழைத்து செல்வது, நமது கடமை. நான் பல முறை கிருஷ்ணர் மடத்துக்கு வந்துள்ளேன். கிருஷ்ணரை தரிசித்தேன். நான் சிறைத்துறை அமைச்சராக இருந்த போதும், எனக்கு மடத்தில் இருந்து அழைப்பு வந்தது.
உடுப்பிக்கு வந்து, சுவாமிகளின் 64வது ஜெயந்தி விழாவில் பங்கேற்றது எனக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. சுவாமிகள் என்னை அன்புடன் ஆசிர்வதித்தார். என்னை பாறை என, அழைக்கின்றனர். பாறை விக்ரகம் செதுக்கவும், படிகள் அமைக்கவும், ஜல்லிக்கற்கள் தயாரிக்கவும் என பல விதங்களில் பயன்படுகிறது. அதே போன்று என்னையும், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.