தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மைசூரில் ‘வன் பாரத்’ திட்டம் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைப்பு

மைசூரில் ‘வன் பாரத்’ திட்டம் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைப்பு

மைசூரில் ‘வன் பாரத்’ திட்டம் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைப்பு


UPDATED : நவ 14, 2026 12:00 AM

ADDED : நவ 13, 2026 11:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 12:00 AM ADDED : நவ 13, 2026 11:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: மைசூரில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், வன் பாரத் திட்டத்தை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார்.

மைசூரு நகரில் சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கவும், பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கவும், காற்று மாசுபாட்டை குறைக்கவும், பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையிலும், வன் பாரத் என்ற திட்டத்தின் கீழ், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி, மைசூரு லலிதா மஹால் பேலஸ் அருகில் உள்ள, கே.சி., லே – அவுட் பூங்காவில் நேற்று நடந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். மரக்கன்றுகளை நட்டு, வன் பாரத் திட்டத்தை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது:

மிக குறைந்த காலத்தில் அடர்ந்த காடுகளை உருவாக்கும், ஜப்பானிய மியாவாக்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மைசூரு மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இந்த திட்டம் அரசு பணத்தை பயன்படுத்தாமல், பாரத் ஸ்டேட் வங்கியின், எஸ்.பி.ஐ., பவுண்டேஷனின் சமூக பொறுப்பு நிதியுடன் செயல்படுத்தப்படுகிறது. சில தன்னார்வ அமைப்புகள், மூன்று ஆண்டுகளுக்கு மரங்களை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளன.

தாவர வடிவமைப்பின் மூலம் காடு வளர்ச்சிக்கு உகந்த சூழல், மண் உயிரினங்களை அதிகரித்தல், பசுமையான சூழல் மண்டலத்தை உருவாக்குவது இதன் நோக்கம்.

இங்கு மரக்கன்றுகள் நடக்கும் நிகழ்ச்சியில் மாணவர்களும் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தவறாமல் இங்கு வந்து தங்கள் நட்ட மரக்கன்றுகள் எந்த நிலையில் உள்ளது என்பதை பார்க்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தீவிரமாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us