UPDATED : நவ 14, 2026 12:00 AM
ADDED : நவ 13, 2026 11:00 PM
பெங்களூரு: பெங்களூரு யஷ்வந்த்பூர் – கோவா மட்கான் வரை வந்தே பாரத் ரயில் சேவை நாளை முதல் துவங்குகிறது.
பெங்களூரு யஷ்வந்த்பூர் – கோவா மட்கான் வரை செல்லும் வந்தே பாரத் ரயிலை, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார். நாளை முதல் வழக்கமான சேவைகள் தொடங்கும் என தென்மேற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
ரயில் எண்: 26655 பெங்களூரு யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்திலிருந்து காலை 7:35 மணிக்கு புறப்பட்டு, கோவாவின் மட்கானுக்கு இரவு 8:55 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் ஹாசன், சக்லேஷ்பூர், சுப்ரமண்யா சாலை, மங்களூரு சந்திப்பு, உடுப்பி, குந்தாபூர், மூகாம்பிகா சாலை பைந்துார், முருடேஷ்வர், கோகர்ணா, கார்வார் ஆகிய இடங்களில் ரயில் நிற்கும். பயண நேரம் 13 மணி நேரம் 20 நிமிடங்கள். புதன்கிழமையை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் ரயில் இயங்கும்.
மறுமார்க்கமாக ரயில் எண்: 26656, கோவாவின் மட்கான் ரயில் நிலையத்திலிருந்து காலை 8:20 மணிக்கு புறப்படும் ரயில் யஷ்வந்த்பூரை இரவு 9:15 மணிக்கு சென்றடைகிறது.
வியாழக்கிழமையை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் ரயில் இயங்கும். மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட உட்கார்ந்து செல்லும் வசதி உடைய ரயில். டிக்கெட் விலை 2,200 ரூபாய்.
இது குறித்து, தென்மேற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி மஞ்சுநாத் கூறியதாவது:
கர்நாடக கடலோர பகுதிகளை இணைக்கும் நோக்கில் ரயில் சேவை துவங்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் மலைப்பாதைகளுக்கு நடுவே செல்வதால், மற்ற வந்தே பாரத் ரயில்களை விட குறைவான வேகத்திலேயே இயக்கப்படும். மணிக்கு 53 -முதல் 54 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்படும்.
வேகத்திற்கு முன்னுரிமை அளிப்பதை விட, பா துகாப்பான பயணத்தை வழங்குவதே முக்கியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
