/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வீட்டுக்கே வரும் காய்கறி: ஹாப்காம்ஸ் புது திட்டம்
/
வீட்டுக்கே வரும் காய்கறி: ஹாப்காம்ஸ் புது திட்டம்
ADDED : ஜூலை 02, 2025 11:18 PM
பெங்களூரு: தனியாரை போன்று, 'ஹாப்காம்ஸ்' மூலமாக காய்கறிகளை வீட்டு வாசலுக்கு கொண்டு சேர்க்க, தோட்டக்கலைத் துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, 'ஹாப்காம்ஸ்' தலைவர் மிர்ஜி உமேஷ் சங்கர் கூறியதாவது:
பெங்களூரில் மால் கலாசாரம் அதிகரிக்கிறது. இவற்றுடன் போட்டி போட வேண்டிய நிர்பந்தம், 'ஹாப்காம்ஸ்'களுக்கு ஏற்பட்டுள்ளது. காய்கறிகளை வீட்டு வாசலுக்கே கொண்டு சேர்க்க, 'ஹாப்காம்ஸ்' தயாராகி வருகிறது.
வரும் நாட்களில் வீட்டு வாசலுக்கே, 'ஹாப்காம்ஸ்' காய்கறிகள், பழங்களை கொண்டு வரும். நடமாடும் வாகனங்கள் மூலம், அபார்ட்மெண்ட், பிளாட்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்.
சோதனை முறையில் முதற்கட்டமாக 60 அபார்ட்மெண்ட்களில், வீட்டு வாசலில் காய்கறிகள் திட்டம் செயல்படுத்தப்படும். மக்களின் வரவேற்பை தெரிந்து கொண்டு, திட்டம் விஸ்தரிக்கப்படும்.
பெங்களூரின் அபார்ட்மெண்ட் பெடரேஷன்களின் ஒருங்கிணைப்பில், திட்டம் செயல்படுத்தப்படும். கிடைக்கும் லாபத்தில், பெடரேஷன்களுக்கும் கமிஷன் வழங்கப்படும்.
மாதந்தோறும் 4 லட்சம் ரூபாய் வியாபாரம் நடந்தால், பெடரேஷன்களுக்கு 20 சதவீதம் கமிஷன் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.