UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 07:48 PM

தாவணகெரே: தாவணகெரேயில் மின்மாற்றி திடீரென வெடித்ததில், பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடை, இரண்டு இரு சக்கர வாகனங்கள் சாம்பலாகின.
தாவணகெரே நகர் கே.டி.ஜே., நகரின் எட்டாவது குறுக்கு தெருவில் நேற்று காலை சாலையோரம் இருந்த மின்மாற்றி, தீப்பிழம்புடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
மின்மாற்றி அருகில் இருந்த பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடை, டாடா ஏஸ் சரக்கு வாகனம், இருசக்கர வாகனம் தீயில் எரிந்து சாம்பலாகின. பேப்பரை எடைக்கு போட இருசக்கர வாகனத்தில் ஹனுமந்தப்பா என்பவர் வந்திருந்தார். அவரின் வாகனம் தீயில் எரிந்தது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘காலை முதலே, மின் மாற்றியில் இருந்து தீப்பொறி வந்து கொண்டிருந்தது. மின் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தும், ஊழியர்கள் யாரும் வரவில்லை. அவர்களின் அலட்சியத்தால், பெரிய அழிவு ஏற்பட்டு உள்ளது’ என்றனர்.
