கிரஹஜோதி திட்ட பயனாளிகள் சரிபார்ப்பு பணிகள் துவக்கம்
கிரஹஜோதி திட்ட பயனாளிகள் சரிபார்ப்பு பணிகள் துவக்கம்
ADDED : ஜூலை 01, 2026 11:28 PM
பெங்களூரு: கிரஹஜோதி திட்டத்தின் பயனாளிகளை சரிபார்க்கும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது.
கர்நாடகாவில் கிரஹஜோதி திட்டத்தின் கீழ் 200 யூனிட்டிற்கு கீழ் பயன்படுத்துவோர், மின்கட்டணம் செலுத்த வேண்டாம்.
இந்நிலையில் குடியிருப்புக்கான மின் இணைப்பை காட்டி வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துவது; இறந்தவர்கள் கணக்குகளை பயன்படுத்தி போலி பதிவு மூலம் திட்ட பலன்களை பெறுவது உள்ளிட்ட வழிகளில் மோசடி நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் கிரஹஜோதி திட்டத்தின் பலன்களை பெற, மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று முதல்வர் சிவகுமார் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், அறிவிப்பை கைவிட்டார்.
அதே நேரம், கிரஹஜோதி திட்டத்தின் பலன்கள் தகுதியானவர்களுக்கு கிடைக்கிறதா என்பதை அறிய, சரிபார்ப்பு பணிகள் நடக்கும் எனவும் அரசு அறிவித்தது.
அதன்படி சரிபார்ப்பு பணிகள் நேற்று முதல் துவங்கியது. மின்சார துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வீடு, வீடாக சென்று ஆதார் உள்ளிட்ட விபரங்களை சரிபார்க்க ஆரம்பித்துள்ளனர்.
