/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துாத்சாகர் நீர்வீழ்ச்சிக்கு சென்ற சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
/
துாத்சாகர் நீர்வீழ்ச்சிக்கு சென்ற சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
துாத்சாகர் நீர்வீழ்ச்சிக்கு சென்ற சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
துாத்சாகர் நீர்வீழ்ச்சிக்கு சென்ற சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
ADDED : ஜூலை 02, 2025 01:46 AM

பெலகாவி : பெலகாவி - கோவா எல்லையில் உள்ள துாத்சாகர் நீர்வீழ்ச்சியை காண, தடையை மீறி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற 21 சுற்றுலா பயணியரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் எச்சரித்து அனுப்பினர்.
கர்நாடகாவின் பெலகாவி - கோவா எல்லையில் 'துாத்சாகர் நீர்வீழ்ச்சி' உள்ளது.
பருவமழைக் காலத்தில் இந்த நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரை பார்க்க, பெரும்பாலான சுற்றுலா பயணியர் விரும்புவர்.
இதற்காக, காஸ்டல் ராக் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து துாத்சாகர் நீர்வீழ்ச்சிக்கு தண்டவாளம் வழியே நடந்து செல்வர்.
இந்த ரயில் பாதை, வனப்பகுதியில் இருப்பதால், வன விலங்குகள் நடமாட்டம் இருக்கும். இது மட்டுமின்றி சிலர், தண்டவாளத்தில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு டிரெக்கிங்கும் செல்வர்.
அப்போது பாறையில் வழுக்கி, நீர்வீழ்ச்சி தடாகத்தில் விழுந்து பல உயிர்பலிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், பாதுகாப்பு காரணமாக, டிரெக்கிங் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை பொருட்படுத்தாமல், சில நாட்களுக்கு முன்பு, பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து கோவாவுக்கு செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்தவர்களில் 21 பேர், காஸ்டல் ராக் ரயில் நிலையத்தில் இறங்கி, துாத்சாகர் நீர்வீழ்ச்சியை பார்க்க ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், அவர்கள் அனைவரையும் எச்சரித்து, திருப்பி அனுப்பினர்.