sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தாய், குட்டி உட்பட 4 புலி இறப்பு விஷம் கலந்து கொலையா?

/

தாய், குட்டி உட்பட 4 புலி இறப்பு விஷம் கலந்து கொலையா?

தாய், குட்டி உட்பட 4 புலி இறப்பு விஷம் கலந்து கொலையா?

தாய், குட்டி உட்பட 4 புலி இறப்பு விஷம் கலந்து கொலையா?


ADDED : ஜூன் 26, 2025 11:11 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாம்ராஜ்நகர்: மலை மஹாதேஸ்வரா மலையின் மீன்யம் வன விலங்குகள் சரணாலயத்தில் தாய்ப்புலியும், மூன்று குட்டிப் புலிகளும் சந்தேகத்துக்கு இடமான வகையில் இறந்து கிடந்தன.

சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவின் மலை மஹாதேஸ்வராவில், மீன்யம் வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் தாய்ப்புலியும், மூன்று குட்டிப்புலிகளும் சந்தேகத்துக்கு இடமான வகையில் இறந்து கிடந்தன.

வனத்துறை ஊழியர்கள், ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, புலிகள் இறந்து கிடந்ததை கண்டு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், புலிகளின் உடல்களை பார்வையிட்டனர். சுற்றுப்புற கிராமங்களில் யாராவது, இறைச்சியில் விஷம் கலந்து, புலிகளை கொன்றிருக்கலாம் என, அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

புலிகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தகவலறிந்த வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். புலிகளின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புலிகள் எண்ணிக்கையில், இந்தியாவிலேயே கர்நாடகா முதல் இடத்தில் உள்ளது. புலிகள் பாதுகாப்பில் பிரசித்தி பெற்ற மாநிலத்தில், ஒரே நாளில் நான்கு புலிகள் இறந்தது, வன விலங்குகள் ஆர்வலர்களுக்கு வருத்தம் அளித்துள்ளது.

கிரிமினல் வழக்கு

புலிகளின் இறப்புக்கான காரணம் குறித்து, ஆழமாக ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும். வனத்துறை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக இருந்தால், அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். புலிகளுக்கு விஷம் கொடுத்திருப்பது உறுதியானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்யும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

- ஈஸ்வர் கன்ட்ரே,

வனத்துறை அமைச்சர்






      Dinamalar
      Follow us