தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எங்களால் பா,ஜ., அழியவில்லை ஈஸ்வரப்பாவுக்கு பாட்டீல் பதிலடி

 எங்களால் பா,ஜ., அழியவில்லை ஈஸ்வரப்பாவுக்கு பாட்டீல் பதிலடி

 எங்களால் பா,ஜ., அழியவில்லை ஈஸ்வரப்பாவுக்கு பாட்டீல் பதிலடி


ADDED : ஜூன் 24, 2026 12:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 12:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''எங்களால் பா.ஜ., நாசமாகவில்லை,'' என, பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட ஈஸ்வரப்பாவுக்கு, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., - பி.சி.பாட்டீல் பதிலடி கொடுத்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன், 'பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட, 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களால் தான், மாநிலத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. அதன் பின், அவர்களால் கட்சி நாசமானது' என, பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட ஈஸ்வரப்பா தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து, முன்னாள் அமைச்சர் பி.சி.பாட்டீல் நேற்று குறிப்பிட்டதாவது:

ஈஸ்வரப்பா எச்சரிக்கையுடன் பேச வேண்டும். நாங்கள் அனைவரும், பா.ஜ.,வில் இணைந்தோம். ஆனால், நீங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

எங்கள் முயற்சிகளால் தான் நீங்கள் அமைச்சரானீர்கள். அமைச்சராக இருந்த போது லஞ்சம் வாங்கி, பெலகாவியில் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்தீர்கள். எனவே, இனி, அப்படி பேசுவதை நிறுத்துங்கள். நாங்கள், பா.ஜ.,வை ஒன்றும் செய்யவில்லை. மாநிலத்தில் எங்களால், பா.ஜ., அழியவில்லை.

இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us