/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ.,வை விட்டு விலக மாட்டோம் ரமேஷ் ஜார்கிஹோளி திட்டவட்டம்
/
பா.ஜ.,வை விட்டு விலக மாட்டோம் ரமேஷ் ஜார்கிஹோளி திட்டவட்டம்
பா.ஜ.,வை விட்டு விலக மாட்டோம் ரமேஷ் ஜார்கிஹோளி திட்டவட்டம்
பா.ஜ.,வை விட்டு விலக மாட்டோம் ரமேஷ் ஜார்கிஹோளி திட்டவட்டம்
ADDED : ஏப் 02, 2025 05:48 AM

பெலகாவி : ''எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.,வை விட்டு வெளியேற மாட்டோம்,'' என, அக்கட்சியின் எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.,வை விட்டு வெளியேற மாட்டோம். எத்னால் புதிய கட்சியை துவக்க மாட்டார். மீண்டும் பா.ஜ.,வில் 100 சதவீதம் நீடிப்பார்.
ஹிந்துத்துவாவுக்காக ஆர்.எஸ்.எஸ்., மட்டும் போதும். வேறு எதுவும் தேவையில்லை. கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகள் வெளியிட வேண்டாம் என்று கூறி உள்ளோம். எத்னாலின் வெளியேற்றம், துரதிருஷ்டவசமானது. விரைவில் கட்சி தலைவர்களை சந்தித்து, எத்னால் சஸ்பெண்டை திரும்ப பெற கேட்டு கொள்வோம்.
ஒரு காலத்தில் எத்னாலை முதல்வராக்குவோம் என்று கூறியவர்கள், இன்று அவர் வெளியேற்றப்பட்டதை கொண்டாடுகின்றனர். தீபாவளியின் போது எத்னால் புதிய கட்சி துவக்க உள்ளார் என்ற செய்தியில் உண்மையில்லை.
பஞ்சமசாலி சமுதாயத்தினர், எத்னாலுக்கு பின்னால் நிற்கவில்லையா என்று எனக்கு தெரியாது. ஒரு சமூகம், ஒரு கட்சிக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்வது தவறு. அரசியல் என்பது வேறு; சமூக சேவை என்பது வேறு.
லிங்காயத் மடாதிபதிகளை எத்னால் சந்தித்து வருகிறார். நானும், குமார் பங்காரப்பாவும் எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., சமூகங்களை சேர்ந்த மடாதிபதிகளை சந்திக்க போகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

