ADDED : ஏப் 02, 2025 03:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமைச்சர் ராஜண்ணாவை ஹனி டிராப் செய்ய முயன்றது பற்றி சி.ஐ.டி., முதற்கட்ட விசாரணை நடத்துகிறது. முதலில் அவர்கள் விசாரிக்கட்டும். நேரம் வரும்போது ஹனி டிராப் பின்னணியில் உள்ள ஹீரோ யார் என்று நான் சொல்கிறேன். கூலிப்படை ஏவி கொல்ல முயன்றது பற்றி, ராஜண்ணா மகன் ராஜேந்திரா போலீசில் புகார் செய்து உள்ளார்.
எம்.எல்.சி.,யான அவரை கொல்ல முயற்சி நடந்து இருப்பது சரி இல்லை. இவ்விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் மாற்றப்படுவாரா என்று எனக்கு தெரியாது. இதுபற்றி நாங்கள் யாரும் விவாதிக்கவில்லை. எல்லாம் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவு. நாங்கள் அதற்கு உடன்படுவோம்.
- சதீஷ் ஜார்கிஹோளி,
பொதுப்பணி துறை அமைச்சர்

